Also Watch
Read this

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 751 மருத்துவ உதவி அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர் விஜய், அவர்களோடு குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

'நலம் TN' டிஜிட்டல் தளம் தொடங்கிவைப்பு
தமிழ்நாடு அரசின் அனைத்து அரசு சுகாதார சேவைகளையும் ஒரே இடத்தில் எளிதாகப் பெறுவதற்காக 'நலம் TN' டிஜிட்டல் சுகாதாரத் தளம் தொடங்கப்பட்டுள்ளது.
பயனாளிகளுக்கான சேவையை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

2,144 பேருக்கு பணி நியமன ஆணை
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 751 மருத்துவ உதவி அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் என 2,144 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார்.

மாற்றுத் திறனாளி மருத்துவருக்கு மேடையை விட்டு இறங்கிச் சென்று, முதல்வர் விஜய் ஆணையை வழங்கினார்.

முதல்வரை கட்டி அணைத்து மகிழ்ச்சி
பணியாணை வழங்கிய முதலமைச்சரை கட்டி அணைத்தும், ஆட்டோகிராஃப் பெற்றும் அலுவலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தாங்கள் விரும்பிய தலைவரது கையில் பணியாணை பெற்ற பேரானந்தத்தில் திளைத்தவர்களுடன், முதல்வர் விஜய் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த வாரீர்
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்காக நன்கொடை வழங்க கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார். விரும்பும் மருத்துவமனைகளுக்கு நன்கொடை வழங்கலாம் என்றும், விவரங்கள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும் என்றும் அறிவித்து உள்ளார்.

மருத்துவ கட்டடங்கள் திறப்பு
இந்த நிகழ்ச்சியின் போது, ரூ.139.47 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கட்டடங்கள் மற்றும் நவீன உபகரணங்களை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெறும் நிகழ்வில் மருத்துவ கட்டடங்களை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்துள்ளார்.

குழு புகைப்படம், செல்ஃபி...
தாங்கள் விரும்பிய தலைவரது கையில் பணியாணை பெற்ற பேரானந்தத்தில் திளைத்தவர்களுடன் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர் விஜய், தொடர்ந்து, பணி நியமன ஆணை பெற்றவர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து உள்ளார்.