news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews சிஎஸ்கே அணியின் புதிய தலைமை பயிற்சியாளர்?
tv

Also Watch

tv

Read this

சிஎஸ்கே அணியின் புதிய தலைமை பயிற்சியாளர்?

CSK

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சிஎஸ்கே அணி

முன்னாள் இந்திய வீரர் ஹேமங் பதானிக்கு வாய்ப்பு என தகவல் 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஸ்டீபன் பிளமிங் விலகிய நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேமங் பதானி ((Hemang Badani)) சென்னை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஹேமங் பதானி 2026 ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். பதானி இந்திய அணிக்காக 40 ஐசிசி ஒருநாள் போட்டியிலும், 4 டெஸ்ட் போட்டியிலும் விளையாடியுள்ளார்.

ஸ்டீபன் பிளமிங்கின் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நீண்டகாலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வந்த ஸ்டீபன் பிளமிங், தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினார்.

கடந்த இரு சீசன்களாக சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்ததால் அணி நிர்வாகம் மீதும், தலைமை பயிற்சியாளர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல கோப்பைகளை வெல்ல முக்கிய காரணமாக இருந்த பிளமிங்கின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து மெக்கல்லம் நீக்கம் 

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பிரண்டன் மெக்கல்லம் நீக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை 1க்கு 4 என்ற கணக்கில் இழந்த இங்கிலாந்து அணி, சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் 1க்கு 2 என்ற கணக்கில் இழந்தது.

இதன் காரணமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு மெக்கல்லம் பயிற்சியாளராக தொடர்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
இந்திய மகளிர் அணி : கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து

இந்திய மகளிர் அணி : கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் அத்துமீறிய நபர்

0
0 min agoshare
மத்திய பிரதேசம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau