Also Watch
Read this
By: Manigandan Raja

15 கி.மீ. தூரம் துரத்திச் சென்று காரை அடித்து நொறுக்கினர்
மகாராஷ்டிராவில் சுற்றுலா சென்ற குடும்பத்தினருக்கு பாலியல் தொல்லை அளித்ததோடு, 15 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாசிக் அருகே இகத்புரி பகுதியிலுள்ள பவ்லி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்ற ஒரு குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்ணிடம் உள்ளூர் கும்பல் ஒன்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது. இதை தட்டிக் கேட்டதால் தாக்கி, காரையும் அடித்து நொறுக்கினர்.
அருணாச்சல பிரதேசத்தில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை

அருணாச்சல பிரதேசத்தில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் 2 வீடுகள், பள்ளி மற்றும் 3 தேவாலயங்கள் வெள்ளத்தில் மூழ்கி சேமடைந்தன. குமே ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பார்சி - பார்லோ மற்றும் தாமின் ஆகிய பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. பக்கே கேசாங் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து முடங்கியுள்ளது.
பெட்ரோல் பங்க் முன்பு அமர்ந்திருந்த சிறுத்தை
கேரளம் மாநிலம் நிலக்கல் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கு முன்பு சிறுத்தை ஒன்று அமர்ந்திருந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நிலக்கல் பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிறுத்தை ஒன்று சாவகாசமாக அமர்ந்திருந்த வீடியோ வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved