Also Watch
Read this
By: Manigandan Raja

தமிழகத்தின் வற்றாத ஜீவநதிகளில் ஒன்றாக விளங்கும் தாமிரபரணி நதி தொடர்ந்து மாசு ஏற்பட்டு வருகிறது இதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது நேரடியாக உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் நேரடியாக தாமிரபரணி ஆற்றில் ஆய்வு மேற்கொண்டு.
புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு பல்வேறு பரிந்துரைகளையும் மேற்கொண்டனர் கடந்த அரசு தாமிரபரணி நதியில் புதிய திட்டங்களை செயல்படுத்தி மாசு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுத்து வந்தது இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை உயர்நீதிமன்றத்தில் தாமிரபரணி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது.
நாள்தோறும் டன் கணக்கில் கழிவு துணிகள் ஈம சடங்குகள் என்ற பல்வேறு கழிவு பொருட்கள் தாமிரபரணி அருகில் கலக்கப்பட்டு வருவதை கண்டிக்கும் வகையில் பல்வேறு அறிவுறுத்தல்களை நீதிமன்றம் வழங்கியது மேலும் தாமிரபரணி ஆற்றில் மாசுபாடு ஏற்படாமல் தடுக்க எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிடவும், நிரந்தரத் தீர்வுக்கான பரிந்துரைகளை தாக்கல் செய்யவும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த சூழலில் தாமிரபரணி நதியை மாசிலிருந்து பாதுகாக்கும் வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக சமூக அலுவலர்கள் மற்றும் நீர்நிலை ஆர்வலர்களுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தினர் இதில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் நீர்நிலை ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
ஈமச்சடங்குகள் மற்றும் பரிகார பூஜைகளை செய்ய வரும் பக்தர்களுக்கு தாமிரபரணி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அமைக்க வேண்டும் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே ஈமச்சடங்குகள் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் கழிவு பொருட்களை தாமிரபரணியின் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டது.
இது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் உறுதி அளித்துள்ளார்.