Also Watch
Read this
By: Manigandan Raja

ஆலந்தூர் பகுதியில் மாநகராட்சி சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடைகள் முறையான எச்சரிக்கை அடையாளங்கள் இல்லாமல் இருந்ததால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். அப்பகுதி மக்களின் தகவலின்படி, வேகத்தடை அமைக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அடுத்தடுத்து விபத்துகள் ஏற்பட்டன.
இந்த சம்பவம் குறித்து நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக, வாகன ஓட்டிகள் வேகத்தடைகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடைகளுக்கு வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் வண்ணம் பூசும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளதுடன், எதிர்காலத்தில் வேகத்தடைகள் அமைக்கப்படும் முன்பே போதுமான எச்சரிக்கை பலகைகள், பிரதிபலிப்பு வண்ணங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved