Also Watch
Read this
By: Manigandan Raja

ஹீரோவாக நடிக்க ரெடியாகும் விஜய் மகன்?
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்த முதலமைச்சர் விஜய், நடிப்புக்கு குட் பை சொல்லிட்டு முழு நேர மக்கள் பணியாக அரசியலில் தன்னை ஈடுப்படுத்திக்கிட்டாரு. இந்த நிலையில, விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், ஹீரோவாக நடிக்க இருக்கறதா தகவல் வெளியாகி இருக்கு.
சந்தீப்கிஷன் நடிப்புல உருவாகி இருக்கும் சிக்மா படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கி இருக்கும் நிலையில அந்த படம் ஜூலை 31ம் தேதி ரிலீசாக இருக்கு. சினிமாவுக்கு இயக்குநராக எண்ட்ரி கொடுத்த ஜேசன் சஞ்சய், அடுத்ததா ஹீரோவா நடிக்க பிளான் பண்ணி இருக்கறதாகவும், அவர் நடிக்கும் படத்தை தமிழ் குமரன் தயாரிக்க இருக்கறதாகவும் சினிமா வட்டாரத்துல பேச்சு அடிபடுது. முதலமைச்சர் விஜய் சினிமாவை விட்டு விலகியதும், அவரது மகன் ஹீரோவாக அறிமுகமாவதாக வெளியாகும் தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கு.
ரசிகரிடம் விஜய் தேவரகொண்டா காட்டிய பாசம்

தமிழ், கன்னடம், தெலுங்கு சினிமாவின் ஐக்கானிங் நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடன் நடந்த திருமணத்துக்கு பிறகு ரணபலி படத்துல நடிச்சுட்டு வராரு. 18வது நூற்றாண்டுல நடந்த உண்மை சம்பவங்கள வைச்சு ஹிஸ்டோரிக்கல் ஜானர்ல உருவாகி வரும் இந்த படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கு. இந்த நிலையில, ஐதரபாத்தில் நடந்த TG20 லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியை பார்க்க விஜய் தேவரகொண்டா வந்து இருக்காரு.
அவரை பார்க்க கூட்டம் அலைமோதி இருக்கு. அப்போ ஸ்டேஜ்க்கு கீழே இருந்த ஒரு ரசிகர் விஜய் தேவரகொண்டாவை பார்த்த மகிழ்ச்சியில் அழுது விட, அவரை பார்த்த விஜய் தேவரகொண்டாவும் அந்த ரசிகருக்கு அருகில் வந்து அணைத்து ஆறுதல் சொல்லி இருக்காரு. அதோடு, ரசிகரின் கிரிக்கெட் ஆர்வம் பற்றியும் கேட்டு இருக்காரு. ரசிகரிடம் விஜய் தேவரகொண்டா காட்டிய அந்த நெருக்கமும், அன்பும் சோஷியல் மீடியாவுல டிரெண்டாகிட்டு வருது.
எதிர்காலத்துக்காக கருமுட்டையை சேமித்து வைத்த நடிகை

பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் தன்னுடைய கரு முட்டைகளை சேமித்து வச்சி இருக்கறதா சொன்ன தகவல், பாலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கு. இது பத்தி பேசிய அவர், 'மீமி' (Mimi) படத்துக்காக உடல் எடையை அதிகரிக்க முயற்சி செஞ்சதாகவும் அப்போதான், கரு முட்டையை சேமிக்கும் சிகிச்சையை செஞ்சிக்கிட்டதாகவும் சொல்லி இருக்காங்க.
அந்த சிகிச்சையின் போது உடல்ல கடுமையான வீக்கம் ஏற்பட்டதாகவும் சொன்ன கீர்த்தி சனோன், ஒரு கர்ப்பிணியை போல தான் தனக்கும் உடல் உபாதைகள் ஏற்பட்டதாகவும், தன்னுடைய சினிமா கெரியர்ல தேவையில்லாத பதற்றமும், குழப்பமும் இருக்க கூடாதுன்னு யோசிச்சு கருமுட்டையை சேமிக்கும் ஸ்மார்ட் பிளானை செய்ததாகவும் விளக்கம் கொடுத்து இருக்காங்க.