news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்
tv

Also Watch

tv

Read this

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

CM Vijay

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஜனநாயகன்

ஜனநாயகன் ரிலீஸ் தேதிக்கே டிரெய்லரா?

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் ஜனநாயகன் படத்துக்கு அண்மையில் ஏ சான்றிதழை சென்சார் போர்டு வழங்கி இருக்கு. இதனால் ஜனநாயகன் ஜூலை 24ம் தேதி வெளியாகும் என ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டாலும் அதுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில, ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் விதமாக புதிய டிரெய்லரை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும், அதுக்கான வேலைகளும் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கு. கடந்த 7 மாதங்களாக ஜனநாயகன் படம் ரிலீசாவது தள்ளி போன நிலையில, படத்துக்கான ரிலீஸ் தேதியை ரசிகர்கள் கொண்டாடும் விதமாக வெளியிடலாம் என்றும் சொல்லப்படுது.

ரூ.1.80 கோடி மோசடி புகாரில் சிக்கிய ஆர்யா


காமெடி கலந்த ஆக்ஷன் ஜானர்களில் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஆர்யா, தற்போது சார்பட்டா இரண்டாம் பாகத்தில் நடிச்சிட்டு வராரு. இதுக்கு இடையில ரன் பேபி ரன் படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் அனந்தன் காடு என்ற படத்துலயும் ஆரியா நடிச்சு இருந்தாரு.

இந்த படம் ஜூன் 25ம் தேதியும் ரிலீசாகி இருக்கு. படத்துக்கு பெருசா வரவேற்பு இல்லாத நிலையில, ஆர்யா உள்ளிட்ட படக்குழு மேல ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டு இருக்கு.

ஐதரபாத்தை சேர்ந்த தனியார் திரைப்பட உபகரணங்களை வாடகைக்கு விடும் நிறுவனம் அளிச்சு இருக்கற புகார்ல, ஆர்யா நடிச்ச அனந்தன் காடு படத்துக்காக விலை உயர்ந்த கேமராக்கள், லைட்டிங் செட்கள், லெஸ் எல்லாம் வாடகைக்கு கொடுத்ததாகவும், அதுக்கான ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் பணத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தராததால படக்குழு, நடிகர்கள் மற்றும் படத்தின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் காவல் நிலையத்துல புகார் கொடுக்கப்பட்டு இருக்கு. அதன்படி ஜூப்ளி ஹில்ஸ் போலீசாரின் விசாரணை ஆர்யா மீதும் இருக்கலாம் என சொல்லப்படுது.

டார்க் ஆக்ஷனில் வெளியான டிரெய்லர்

எந்த கேரக்டரை கொடுத்தாலும் அதுல தனக்கென தனி ஜானரையே உருவாக்கும் ஒரு நடிகர்தான் விஜய்சேதுபதி. தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் டிரெயின் படத்துல விஜய் சேதுபதி நடிச்சு இருக்காரு. அவருடன் சேர்ந்து ஸ்ருதி ஹாசன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன், நரேன் உள்ளிட்டோரும் நடிச்சு இருக்காங்க.

டிராவலுடன் சேர்ந்த டார்க் ஆக் ஷன் ஜானரில் உருவாகி இருக்கும் டிரெயின் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கு. ஒரே இரவில் ரயில் பயணத்தின் போது நடக்கும் மர்மமான சம்பவங்களை கூறும் டிரெய்லர், டிரெயின் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிச்சு இருக்கு.

என்ன வேணாலும் பேசுவீங்களா- நடிகை ரியாக்ஷன்


தமிழ் சினிமாவின் சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட ஹன்சிகா, விவாகரத்துக்கு பிறகு வெளிநாடுகளுக்கு பயணம் செய்து வந்ததோடு, கோயில் கோயிலாக சென்று ஆன்மீக பிரார்த்தனையில் ஈடுபட்டு வறாங்க.

இந்த நிலையில தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்களுக்கு ஹன்சிகா ரியாக்ட் பண்ணி இருக்காங்க. பொதுவாகவே பிரபலங்கள் என்றாலே, அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை யார் வேண்டுமானலும் விமர்சிக்கலாம்னு பலரும் நினைக்கறாங்க.

ஆனால், பிரபலங்களுக்கும் மனசு இருக்கு என்பதை புரிந்து கொள்ளணும். வாழ்க்கையில கஷ்டமான காலத்தை கடந்து செல்லும்போது அவங்க மனநிலை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து பாருங்கன்னு பேசி இருக்காங்க. ஹன்சிகாவின் இந்த பதில், யாருக்குன்னு தான் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிட்டு வறாங்க.

90’S கிட்ஸ மிரள வைத்த ஜூராசிக் பார்க் நடிகர் மறைவு


90ஸ் கிட்ஸோட பேவரைட் ஹாலிவுட் படங்கள்ல ஒன்னு ஜுராசிக் பார்க்-ன்னு சொல்லலாம். அப்போதே அனிமேஷன் மற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகள்ல வந்த பிரமாண்ட டைனோசர்கள் பிரமிக்க வச்சி இருக்கும். இப்படி ஒவ்வொரு காட்சியிலும் பிரமிப்பை தந்த ஜுராசிக் பார்க் படத்துல நடிச்ச ஹீரோவான, சாம் நீல், தனது 78வது வயசுல உயிரிழந்து இருக்காரு.

ஜுராசிக் பார்க் படம் மூலம் உலகம் முழுவதும் சிறந்த நடிகராக பார்க்கப்பட்ட சாம் நீல், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதையும் பெற்றவர். தொடர்ந்து பல ஹாலிவுட் படங்கள்ல எதார்த்தமாக நடிச்சு எவர்கிரீன் நடிகரான இருந்த சாம் நீல் உடல்நல குறைவால சிட்னியில காலமாகி இருக்காரு. அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கலை பதிவிட்டு வறாங்க.

கனவில் வந்த அவதார் - உண்மையை சொன்ன பிரபலம்


உலகிலேயே அதிக வசூலை வாரி குவித்த படம் அவதார். கற்பனைக்கும் எட்டாத காட்சிகளை கண் முன் காட்டிய அவதார் படத்தின் ஒவ்வொரு பாகமும் உலகளவுல வரவேற்பை பெற்றது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்துல உருவான இந்த அவதார் படங்கள் எல்லாம் கனவில் உருவானது என்று சொன்ன நம்ம முடியுதா.

ஜேம்ஸ் கேமரூன் இளைஞராக இருந்தப்போ, அவரது கனவில் ஒளிரும் மரங்கள், காடு, துகள்களை உமிழும் நதி, அரிய வகை உயிரினங்கள் எல்லாம் ஒளியில் உருவாவது போல பார்த்ததாகவும், அத வச்சே அவதார் படத்தை எடுத்ததாகவும் சொல்லப்படுது. அவதார் மட்டுமில்லாம, ஆக்ஷனின் அதிரடி ஹீரோவான அர்னால்ட் நடிச்ச டெர்மினேட்டர் படமும் ஜேம்ஸ் கேமரூன் கற்பனையில் உருவான ஒரு கேரக்டர்தானாம்.

அதிக காய்ச்சலில் படுத்திருந்த ஜேம்ஸ் கேமரூன் கனவில், ரோபோ ஒன்று கத்தியை கையில் வச்சிக்கிட்டு நெருப்பு பிழம்புல இருக்கறாபோல பார்த்து இருக்காரு. கண் விழிச்ச அவர், கனவுல வந்த காட்சிகளை வரைந்த ரோபோதான், அர்னால்ட் நடிச்ச டெர்மினேட்டர் உருவாக காரணம்னு சொல்லப்படுது.

Related Link
குரல் வழி உணர்வூட்டிய இசைக்குயில், இசைப்பேரரசி எஸ்.ஜானகி

குரல் வழி உணர்வூட்டிய இசைக்குயில், இசைப்பேரரசி எஸ்.ஜானகி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்காக மாஸ் பிளான்

2
7 hrs 30 mins agoshare
ஜனநாயகன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau