news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேனர் வைத்த மக்கள்
tv

Also Watch

tv

Read this

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேனர் வைத்த மக்கள்

கோடாலி, அரியலூர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அரசு டாஸ்மாக்

தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றவுடன் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகள் முதற்கட்டமாக மூடப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டத்தில் 3 கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அறிவிக்கப்பட்ட 3 கடைகளில் அரியலூரில் உள்ள 2 கடைகள் மட்டுமே மூட அரசு அப்போது நடவடிக்கை எடுத்தது. ஆனால் மீதமுள்ள தா.பழூர் அரசு டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் அதிருப்தி அடைந்த தா.பழூர் பகுதி பொதுமக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் போராட்டம் நடத்தி தா.பழூர் டாஸ்மாக் கடையை மூடி பிள்ளையார் சுழி போட்டனர்.

போராட்டத்தின் வெற்றி எதிரொலி காரணமாக அதனைத் தொடர்ந்து வாரியங்காவல் டாஸ்மாக் கடையை மூட மக்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி மூடினர். அதன் தொடர்ச்சியாக வல்லம், கல்லாத்தூர் ஆகிய ஊர்களிலும் தொடர் போராட்டம் நடத்தி டாஸ்மாக் கடையை மூடினர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோடாலி அரசு டாஸ்மாக் கடையை மூட பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்து பொதுமக்கள் ஒத்துழைப்போடு போராட்டம் நடத்தினர்.

இதன் எதிரொலி காரணமாக மற்ற கோடாலி அரசு டாஸ்மாக் கடையும் மூடப்பட்டது. இதனிடையே தமிழக முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்து பொதுமக்கள் சார்பில் கோடாலி கிராமத்தில் பேனர் வைத்துள்ளது
காண்போரை வியக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி ஒட்டு மொத்தமாக அரியலூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 6 கடைகள் பொதுமக்கள் தொடர் போராட்டத்தின் காரணமாக மூடப்பட்டிருப்பது தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தில் மது இல்லா மாவட்டமாக மாற்றுவதற்கு மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக அரியலூர் மாவட்டம் திழ்ந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வரவேற்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Link
நிலத்தை ஆக்கிரமித்து பாதையாக பயன்படுத்திய மக்கள்

நிலத்தை ஆக்கிரமித்து பாதையாக பயன்படுத்திய மக்கள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாட்ஸ் அப்பில் செயலி இணைப்பை அனுப்பி மோசடி

0
16 mins agoshare
ராணிப்பேட்டை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau