Also Watch
Read this
By: Manigandan Raja

தென்காசி மாவட்டம், செங்கோட்டை பேருந்து நிலையம், அங்குள்ள பொதுக் கழிப்பறைகள் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் அமைய உள்ள வணிக வளாகங்கள் தொடர்பாக, தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சருமான ராஜு இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, பேருந்து நிலையத்தின் தூய்மை, பொதுமக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள், குடிதண்ணீர் , கழிப்பறைகளின் பராமரிப்பு நிலை மற்றும் பேருந்து நிலையத்தில் அமைக்கப்படவுள்ள வணிக வளாகங்கள் தொடர்பான பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் விரிவாக கேட்டறிந்தார் அப்போது செய்தமடைந்த குடி தண்ணீர் மற்றும் கட்டணம் இல்லாத கழிப்பறை போன்றவற்றை ஆய்வு
செய்து அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி உடனடியாக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார் மேலும்.

பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் அனைத்து வசதிகளையும் ஒரு மாதத்திற்குள் விரைந்து முடிக்கவும், வணிக வளாகப் பணிகளை திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜு அறிவுறுத்தினார்.
அமைச்சரின் திடீர் ஆய்வால் நகராட்சி அதிகாரிகள் பரபரப்புடன் செயல்பட்டனர். இந்த ஆய்வில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் நியாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved