Also Watch
Read this
By: Manigandan Raja

கள்ளக்குறிச்சி அருகே விளம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினம் இவர்களது மகன்கள் பெருமாள், மோகன், இளையாபிள்ளை இவர்கள் உட்பட 7 பேருக்கு சொந்தமான விவசாய நிலம் மலைக்கோட்டாலம் கிராமத்தில் உள்ளது. மேலும் அதே பகுதியில் ராமலிங்கம், சுரேந்திரன் உள்ளிட்ட பலருக்கும் அங்கு நிலம் உள்ளது.
இந்த நிலையில் ரத்தினம் இடத்தில் உள்ள 26 சென்டில் அவர்கள் நிலத்திற்கு செல்வதற்காக வழிப்பாதை அமைத்து பயன்படுத்தி வந்த நிலையில் ராமலிங்கம் சுரேந்திரன் உள்ளிட்ட பலரும் அந்த வழிப்பாதையை பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் தற்போது அந்த வழிப்பாதையை மண் கொட்டி தார் சாலை அமைக்க ராமலிங்கம் சுரேந்திரன் உள்ளிட்ட தரப்பினர் முயன்றுள்ளனர். இதனால் ரத்தினம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எங்கள் பட்டா இடத்தில் நீங்கள் எப்படி சாலை அமைக்க முடியும் என அவர்களிடம் கேட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சுரேந்திரன் ஆதரவாளர்களான ராமலிங்கம், சென்ராசு, தங்கராசு, சக்திவேல் ஆகியோர் கூட்டாக சேர்ந்து பெருமாள், மோகன், இளையாபிள்ளை ஆகியோரை கொடூரமாக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதனால் படுகாயம் அடைந்தவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தனிநபர் பட்டா இடத்தில் மற்ற தனிநபர்கள் சாலை அமைக்க முயன்ற போது அதை தட்டி கேட்டு இடத்தில் ஒருவரை ஒருவர் மோதிக் கொள்ளும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved