Also Watch
Read this
By: Manigandan Raja

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ஆம்பூர் அடுத்த சான்றோர் குப்பம் பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
அப்போது அந்த மனுவில் சான்றோர் குப்பம் பகுதி வழியாக ஐந்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயணித்து வருகின்றனர்.
மேலும் அமீன் நகர் என்ற பகுதியில் அரசு மதுபான கடை வருவதாக கேள்விப்பட்டோம் அந்த இடத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளி மற்றும் தொழில் மையம் மற்றும் உரம் கம்பெனி உள்ளிட்டவை உள்ளன. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.
எனவே பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கருதி அந்தப் பகுதியில் வரும் ஒயின்ஷாப் வருவதை தயவுசெய்து தடுத்து நிறுத்த வேண்டும் மேலும் எதிர்கால சந்ததிக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved