news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வாட்ஸ் அப்பில் செயலி இணைப்பை அனுப்பி மோசடி
tv

Also Watch

tv

Read this

வாட்ஸ் அப்பில் செயலி இணைப்பை அனுப்பி மோசடி

வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஜோதி (45) என்பவர் ஓவியம் வரையும் கூலி வேலை செய்து வருகிறார் இவருக்கு 2 பெண் பிள்ளைகள் மனைவி உள்ள நிலையில் சொந்தமாக கார் ஒன்று சமீபத்தில் சாலையில் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது இதனை அடுத்து காப்பீடு மற்றும் விபத்து தொடர்பான ஆவணங்களைப் பெறுவதற்காக சி.எஸ்.ஆர் (CSR) தொடர்பான செயலியை இணையத்தில் தேடி பதிவிறக்கம் செய்ய முயன்றுள்ளார்.

அப்போது ஆன்லைனில் இருந்து இவருடைய மொபைலுக்கு "M.PARIWAHAN UPDATE 2026" என்ற பெயரில் வாட்ஸ்-அப் மூலம் வந்த செயலி இணைப்பை அதிகாரப்பூர்வமானது என நம்பி பதிவிறக்கம் செய்து நிறுவியதாக தெரிகிறது அப்போது அந்த செயலியை திறந்த உடனேயே அவரது செல்போன் திடீரென செயலிழந்ததுடன் மொபைலில் இருந்த தகவல்களை அறிய முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்..

மேலும், அவரது செல்போனில் இருந்த சுமார் 780 தொடர்பு எண்களுக்கு அதே செயலி இணைப்பு தானாகவே வாட்ஸ்-அப் மூலம் அனுப்பப்பட்டதாகவும், அந்த இணைப்பை திறந்த சில நண்பர்களின் செல்போன்களும் செயலிழந்ததாகவும் கூறப்படுகிறது இதனால் இது திட்டமிட்ட இணையவழி மோசடியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது மேலும் இச்சம்பவத்தில் என்னுடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4,800 வரை நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தனது வங்கி மற்றும் மொபைல் தகவல்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூலி ஜோதி வேதனையுடன் கூறினார்.


எனவே இதுகுறித்து மாவட்ட காவல்துறையும், சைபர் கிரைம் பிரிவு போலீசாரும் உடனடியாக நீக்கப்படும் இதுகுறித்து விசாரணை நடத்தி, இதுபோன்ற போலி செயலிகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோரிக்கை விடுத்ததோடு பொதுமக்கள், அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் செயலிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், வாட்ஸ்-அப், குறுந்தகவல் அல்லது சமூக வலைதளங்கள் மூலம் வரும் தெரியாத செயலி இணைப்புகளை பதிவிறக்கம் செய்யவோ, தனிப்பட்ட தகவல்களை பகிரவோ கூடாது என்று சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருவதாகவும் ஆகையால் நான் பாதிக்கப்பட்டது போல் யாரும் பாதிக்கப்படக்கூடாது இதனை உடனடியாக காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென குடும்பத்துடன் கூலி தொழிலாளி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Link
பொதுக் கழிப்பறைகள், வணிக வளாகங்களில் ஆய்வு

பொதுக் கழிப்பறைகள், வணிக வளாகங்களில் ஆய்வு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாட்ஸ் அப்பில் செயலி இணைப்பை அனுப்பி மோசடி

0
57 mins agoshare
ராணிப்பேட்டை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau