Also Watch
Read this
By: Manigandan Raja

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு உட்பட்ட எல்கில் பகுதியில் வசித்து வருபவர் லாரன்ஸ். இவர் கடந்த 14 வருடங்களுக்கு மேலாக இங்கு வசித்து வரும் நிலையில் இவர் வசிக்கும் பகுதியில் குடிநீர் பிரச்சினை மற்றும் கழிப்பிட பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதைப் பற்றி இந்த வார்டு கவுன்சிலர் ரவி என்பவரிடம் சென்று குறைகளை சரி செய்து தருமாறு கேட்டுள்ளார். இது வாக்குவாதமாக மாறிய நிலையில் கவுன்சிலர் ரவி இவரை கடுமையாக தாக்கியதோடு மட்டுமல்லாமல் ஜாதி பெயரை சொல்லியும் தகாத வார்த்தைகள் பேசும் இவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனை அடுத்து காவல்துறையினரிடம் சென்றால் தனக்கு நீதி கிடைக்காது என்று மாவட்ட ஆட்சியரிடம் இச்சம்பவம் குறித்து மனு அளித்துள்ளார். தற்பொழுது கவுன்சிலர் ரவி இவரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved