Also Watch
Read this
By: Manigandan Raja

டெல்லியில் அமைச்சர்கள் எம்.விஜய் பாலாஜி, கீர்த்தனா திறப்பு
நாட்டின் தலைநகரான புது டெல்லியில், தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் (கோ-ஆப்டெக்ஸ்) நவீனமயமாக்கப்பட்ட "புதுப்பாவு" விற்பனையகம் இன்று மாலை கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எம்.விஜய் பாலாஜி மற்றும் தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் திறப்பு விழா, டெல்லி வாழ் தமிழ் மக்கள் மற்றும் கைத்தறி பிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் பாரம்பரியக் கைத்தறி ரகங்களை உலகளவில் கொண்டு சேர்க்கும் நோக்கில், புது டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள மாநில எம்போரியா வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் 'புதுப்பாவு' விற்பனையகம் (ஜூலை 13, திங்கட்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.
தமிழக அரசின் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு. எம்.விஜய் பாலாஜி இந்த நவீனமயமாக்கப்பட்ட புதிய விற்பனையகத்தைத் திறந்து வைத்தார். அவருடன் தமிழகத் தொழில்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா கலந்துகொண்டு சிறப்பித்தார்.
புது டெல்லிக்கான தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி திரு. கே. வெங்கட நாராயணா கௌரவ விருந்தினராகப் பங்கேற்றார்.நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த 'புதுப்பாவு' விற்பனையகத்தில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு, கோவை கோரா காட்டன், மற்றும் பல்வேறு மாவட்டங்களின் பாரம்பரியப் பருத்திப் புடவைகள், வேட்டிகள், சுடிதார் ரகங்கள் மற்றும் வீட்டு உபயோகக் கைத்தறிப் பொருட்கள் டெல்லி மக்களுக்காகக் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மத்திய உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொலை வழக்கு

மத்திய உளவுத்துறை அதிகாரி கொலை வழக்கில் ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலர் உள்பட 5 பேரை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. 2020-ல் டெல்லியில் நடைபெற்ற கலவரத்தின்போது உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொலை செய்யப்பட்டு, சாக்கடையில் வீசப்பட்டார். இந்த வழக்கில், 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதில் தாஹீர் ஹுசைன் உட்பட 5 பேரை குற்றவாளிகளாக அறிவித்த நீதிமன்றம், 6 பேரை விடுவித்தது.
காருக்கு டீசல் நிரப்பிவிட்டு பணம் தராமல் தப்பிக்க முயற்சி

ஹரியானாவில் டீசல் நிரப்பிவிட்டு பணம் தராமல், தடுத்த பங்க் ஊழியரையும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் காரில் இழுத்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குருக்ஷேத்ரா அருகே ஷாபாத் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் தப்பிக்க முயன்ற ஓட்டுநரை திறந்திருந்த கார் கதவின் வழியாக ஊழியர் பிடித்துக்கொண்டதால், அவரை காரிலேயே இழுத்துச் சென்றார்.