Also Watch
Read this
By: Admin News Tamil

அதே இடம் அதே விழா - விஜய் ரூட்டில் ரஜினி
நெல்சனின் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர்-2 படம் அக்டோபர் 15ம் தேதி ரிலீசாக இருக்கு. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த பாகத்துல ரஜினி கூட சேர்ந்து வித்யா பாலன், விஜய் சேதுபதி நடிச்சு இருக்காங்க. கூலி படத்துல ரஜினியுடன் ஆமீர்கான் நடிச்சது போல, ஜெயிலர் 2-ல ஹிருத்திக் ரோஷன் நடிக்க கமிட்டானதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில படத்தின் இசை வெளியீட்டு விழாவ பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். இதுக்காக மலேசியாவில் இருக்கும் புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் விழாவை நடத்த படக்குழு திட்டமிட்ட நிலையில, அதுக்கு ரஜினியும் கிரீன் சிக்னல் கொடுத்து இருக்காறாம்.
இதே ஸ்டேடியத்துல தான் விஜயின் கடைசி படமான ஜனநாயகனின் இசை வெளியீட்டு விழாவும் நடந்து இருக்கு. ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒருங்கிணைத்த மாலிக் என்பவர்தான் ஜெயிலர்2 படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் organaize பண்ண போறதாக சொல்லப்படும் நிலையில், அவர் ரஜினியை சந்திச்ச புகைப்படமும் வெளியாகி இருக்கு.
ராஜ்ஜியத்தை தேடும் கதையா தி ஒடிஸி?

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனின் இயக்கத்துல உருவாகி இருக்கும் தி ஒடிஸி திரைப்படம் இந்தியாவுல ஜூலை 17ம் தேதி ரிலீசாக இருக்கு. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கற ஒடிஸி படத்துக்கான ப்ரீ புக்கிங்கும் இந்தியாவுல ஹஸ்ஃபுல்லாகி இருக்கு.
ஹோமர் எழுதிய தி ஒடிஸி நாவலை தழுவி எழுக்கப்பட்ட இந்த படம், ட்ரோஜன் போர் முடிஞ்சதுக்கு அப்பறம், தன்னுடைய மனைவி, மகன் மற்றும் ராஜ்ஜியத்தை மீண்டும் அடைவதற்காக அரசர் ஒடிசியஸ் செய்யும் நீண்ட பயணமும், அப்போது அவர் சந்திக்கும் ஆபத்து, சோதனை, கடவுளின் கோபத்தை ஃபேண்டஸி கதையாக திரையில் கிறிஸ்டோஃபர் நோலன், உருவாக்கி இருக்கறதா ஹாலிவுட் வட்டாரத்துல சொல்லப்படுது. இந்த நிலையில ஒடிஸி படத்தின் மேக்கிங் வீடியோ ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிலீசாகி இருக்கு.
ரகசியத்தை தேடும் ஹவுஸ் ஆஃப் தி டிராகன் சீசன்-3

ஜியோ ஹாட்ஸ்டார்ல வெளியாகி இருக்கும் ஹவுஸ் ஆஃப் தி டிராகன் வெப் தொடரின் 3வது சீசன் ரசிகர்களிடையே வரவேற்ப பெற்று வருது. டார்க் உலகம், குடும்ப ரகசியத்தை தேடும் ஒரு பயணம், காத்திருக்கும் அரியணை என பிரமாண்டம் தாண்டிய கிராஃபிக்ஸ் காட்சிகளும், நடிப்பும் விறுவிறுப்பை ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுது.
துயரம், அதிகார ஆசை, மறைக்கப்பட்ட உண்மை என ஒவ்வொரு இடமாக நகரும் காட்சிகளும், புதிய நடிகர்களின் உழைப்பும் இருக்கும் ஹவுஸ் ஆஃப் தி டிராகன் சீசனை அடுத்தகட்டத்துக்கு நகர்த்துவதாக விமர்சிக்கப்படுது.