Also Watch
Read this
By: Manigandan Raja

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓரத்தூர் மேட்டு கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்,இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் வீட்டு மனைப்பட்டா, அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதானம், சுகாதார நிலையம் மற்றும் மேய்ச்சல் நிலம் அமைக்க கோரி மாவட்ட ஆட்சியர் சினேகாவிடம் மனு அளித்தனர்.
சர்வே எண்.109-ல் 19 பேருக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும்,அதே இடத்தில் நான்கு தலைமுறைகளாக வசித்து வரும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், அரசு பள்ளியில் பயிலும் 300 மாணவ, மாணவிகளுக்காக விளையாட்டு மைதானம் மற்றும் சுகாதார நிலையம் அமைக்கவும், 5 ஆயிரம் ஆடு, மாடுகளுக்கான மேய்ச்சல் நிலத்தை ஒதுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 100-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved