news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அமெரிக்காவின் ஒப்பந்தத்தை ஈரான் விரும்பவில்லை
tv

Also Watch

tv

Read this

அமெரிக்காவின் ஒப்பந்தத்தை ஈரான் விரும்பவில்லை

வெள்ளை மாளிகை, அமெரிக்கா

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
டிரம்ப்

ஈரான் தான் முதலில் தாக்குதல் நடத்தியது 

ஈரானுடனான போர் விவகாரம் குறித்து வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இரண்டு நாட்களுக்கு முன்பே ஈரானுடன் முக்கிய ஒப்பந்தத்தை செயல்படுத்த விரும்பியதாகவும், ஆனால் அவர்கள் அதற்கு ஒத்துவரவில்லை எனவும் கூறினார்.

ஈரான் முதலில் தாக்குதல் நடத்தியதாகவும், அது மிகப்பெரிய தவறு எனவும் கூறிய டிரம்ப், ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறினார்.

பதவியை ராஜினாமா செய்தார் உக்ரைன் பிரதமர் யூலியா 

கடந்த ஆண்டு ஜூலையில் உக்ரைன் பிரதமராக பதவியேற்ற யூலியா ஸ்விரைடென்கோ((Yulia Svyrydenko)), தனது பதவியை ராஜினாமா செய்தார்.

உக்ரைனின் மின்சாரக் கட்டமைப்பு மற்றும் எரிவாயு விநியோக அமைப்புகள் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசாங்கத்தின் முக்கிய சவாலாக இருக்கும் என்று யூலியா கூறினார்.

ஹமாஸ் சொந்தமான சோதனை சாவடி மீது இஸ்ரேல் தாக்குதல்

காசாவில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காவல் படைக்குச் சொந்தமான சோதனை சாவடியில் இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். ஜபாலியா((Jabalia )) பகுதியில் உள்ள சந்தைக்கு அருகில் நான்கு ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கும் டிரம்ப், குறைந்து வரும் ஆயுத கையிருப்பால் அச்சம்

கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கும் டிரம்ப், குறைந்து வரும் ஆயுத கையிருப்பால் அச்சம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கட்டாய திருமணத்தில் இருந்து தப்பிக்க மொட்டை?

0
0 min agoshare
கேரளம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau