Also Watch
Read this
By: Manigandan Raja

38 அடி நீளமும் 12.5 அடி உயரமும் கொண்ட எலும்புக்கூடு
நியூயார்க்கில் நடைபெற்ற ஏலத்தில் உலகின் மிகப்பெரிய டி-ரெக்ஸ் டைனோசர் எலும்புக்கூடு 482 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. 38 அடி நீளமும் 12.5 அடி உயரமும் கொண்ட இது, அமெரிக்காவின் சவுத் டகோட்டாவில் Gary Gus Licking என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 2021ல் கண்டறியப்பட்டது. அவர் மறைந்த நிலையில், ஏலம் விடப்பட்ட தொகை அவரது குடும்பத்திற்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய முயற்சிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அழைப்பு
ஒவ்வொரு குழந்தைக்கும் உயிர் காக்கும் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய, உலக சுகாதார அமைப்பு ((WHO)) புதிய முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 2025-ல் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் விகிதம் அதிகமாக இருந்தபோதிலும், சுமார் 12 லட்சம் குழந்தைகள், முதல் தடுப்பூசியைப் பெறவில்லை என்று மதிப்பீடுகள் தெரிவித்துள்ளது.
மேலும், 6 லட்சம் குழந்தைகள் பகுதியளவு மட்டுமே தடுப்பூசி பெற்றுள்ளதாகவும், இதனால் நோய் பாதிப்பு அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு குழந்தைக்கும் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்யப் புதிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு WHO அழைப்பு விடுத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved