Also Watch
Read this
By: Manigandan Raja

நல்ல இன்னிங்ஸை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கிய நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தந்தால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ரோகித் சர்மா 21 பந்துகளில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலியும் 6 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.
முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 47.5 ஓவர்களில் 258 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 259 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 45.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கில் அதிகபட்சமாக 80 ரன்கள் அடித்தார்.
முதல் ஒருநாள் போட்டியின் வெற்றி நம்பிக்கை தருகிறது

கடந்த இரண்டு டி-20 தொடர்களில் ஒரு போட்டிகளில் கூட வெற்றி பெறாமல் போனது மிகுந்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கிடைத்த வெற்றி மிகுந்த நம்பிக்கை அளிப்பதாகவும் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் அக்சர் படேல் கூறினார்.
தான் விளையாடிய ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முதன்மையானதாக இந்த போட்டியைத் தான் கருதுவேன் என அவர் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved