news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மகிந்திரா கார் மற்றும் டிராக்டரை வைத்து சாகசம்
tv

Also Watch

tv

Read this

மகிந்திரா கார் மற்றும் டிராக்டரை வைத்து சாகசம்

ஹரியனா

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஹரியனா

இரண்டு பேரை கைது செய்து எச்சரித்து அனுப்பிய போலீசார் 

ஹரியனா மாநிலத்தில் மகிந்திரா கார் மற்றும் டிராக்டரை வைத்து சாலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் சாகசத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

நுஹ்((Nuh)) பகுதியில் டிராக்டர் மற்றும் மகிந்திரா காரின் பின் பக்கம் கயிறு கட்டி எதிர் எதிர் திசையில் நிற்க வைத்து, வாகனத்தை இயக்கி எந்த வாகனம் போட்டியாக உள்ள மற்றொரு வாகனத்தை இழுத்து செல்கிறது என இருவர் சாகசத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் இருவரையும் பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

பெங்களூரு கூட்ட நெரிசல் வழக்கு - 3 அதிகாரிகள் விடுவிப்பு

கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசல் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து அப்போதைய காவல் ஆணையர் தயானந்தா, கூடுதல் காவல் ஆணையர் விகாஷ் குமார் மற்றும் துணை காவல் ஆணையர் சேகர் எச்.டெக்கன்னவர்((Tekkannavar)) ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் மீதான துறை ரீதியான விசாரணை நடவடிக்கைகளையும் கர்நாடக அரசு முடித்து வைத்துள்ளது. 2025ம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் 16.40% உயர்ந்து புதிய சாதனை

இந்தியாவின் நிகர நேரடி வரி வசூல் நடப்பு நிதியாண்டில் 16.40 சதவிகிதம் உயர்ந்து 6 லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின்படி.

கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட நிகர கார்ப்பரேட் வரி வசூல் 1 லட்சத்து 96 ஆயிரம் கோடியிலிருந்து, 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், கார்ப்பரேட் அல்லாத தனிநபர் வருமான நிகர வரி வசூல் 3 லட்சத்து 84 ஆயிரம் கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

அதே போல் பங்குச்சந்தை முதலீடுகள் மூலமான எஸ்.டி.டி வரி வசூல் 17 ஆயிரத்து 875 கோடியிலிருந்து, 26 ஆயிரத்து 428 கோடியாகக் கணிசமாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
இந்திய வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல் சம்பவம்

இந்திய வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல் சம்பவம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"என்னோட அடுத்த பிளான் இது தான்.." மனம் திறந்த பாரி இளவழகன்

0
19 mins agoshare
Anbe diana








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau