news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அறுவைச் சிகிச்சை
tv

Also Watch

tv

Read this

துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அறுவைச் சிகிச்சை

Pawan Kalyan

9

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சினிமா செய்திகள் 1

'கயல்' சந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள 'சிங்கா' திரைப்பட டீசர் :

ராஜா துரை சிங்கம் இயக்கத்தில் 'கயல்' சந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள 'சிங்கா' திரைப்படத்தின் டீசர் யூடியூபில் வெளியாகியுள்ளது. நாய் பாசத்தை மையாமாக கொண்டு உருவாகியுள்ள 'சிங்கா', கோடை விடுமுறையையொட்டி திரையரங்குகளில் வெளியாகிறது. மனோஜ் சின்னசாமி திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அறுவைச் சிகிச்சை :

நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாணுக்கு உடல்நலக் குறைவு காரணமாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜனசேனா கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாகவும், சுமார் ஒரு வாரம் முதல் 10 நாள்கள் வரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடிக்கும் "கர" திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியீடு :

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள "கர" திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இசை வெளியீட்டு விழாவும் இன்று நடைபெறும் என தெரிவித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையில் கிராமத்து கதைக்களத்தில் ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 30-ம் தேதி வெளியாக உள்ளது.

"பிக்பாஸ்" ராணவ் நடித்துள்ள "பிரேக் பாஸ்ட்" திரைப்படம் :

"பிக்பாஸ்" ராணவ் நடித்துள்ள "பிரேக் பாஸ்ட்" திரைப்படம், ஏப்ரல் 24-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டைரக்டர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காந்தி கிருஷ்ணா, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ரோஸ்லின், கிருத்திக் மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Related Link
விவாகரத்து குறித்து மனம் திறந்த நடிகை ஹன்சிகா மோத்வானி

விவாகரத்து குறித்து மனம் திறந்த நடிகை ஹன்சிகா மோத்வானி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத் டைட்டன்ஸ் முன்னிலை, பின் தொடரும் RCB, SRH

2
9 mins agoshare
குஜராத் டைட்டன்ஸ் முன்னிலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved