news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான Dhurandhar: The Revenge
tv

Also Watch

tv

Read this

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான Dhurandhar: The Revenge

Dhurandhar

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
துரந்தர் 2

ரூ.1,800 கோடிக்கும் மேல் வசூலித்த துரந்தர் இரண்டாம் பாகம் :

ஆதித்யா தார்-ரன்வீர் சிங் கூட்டணியில் உருவாகி ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த துரந்தர் இரண்டாம் பாகம் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. கடும் எதிர்ப்பு காரணமாக அரபு நாடுகளில் திரைப்படம் வெளியாகாத போதிலும் வசூலை வாரி குவித்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு படம் வெளியாகியுள்ளது.

'CON CITY' திரைப்படத்தின் டிரைலர் வெளியானது :

ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜூன்தாஸ், அன்னா பென், யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள 'CON CITY' திரைப்படத்தின் டிரைலர் யூடியூபில் வெளியானது. நடுத்தர குடும்பத்தின் பின்னணியில் வாழும் இளைஞனுக்கு ஏற்படும் சிக்கல்களை மையப்படுத்தி படம் உருவாகி இருக்கிறது. சான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள 'CON CITY', தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ரசிகர்களின் பாராட்டு மழையில் சமந்தாவின் 'Maa Inti Bangaaram' :

நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடிப்பில் வெளியான 'Maa Inti Bangaaram' திரைப்படம் முதல் நாளில் 13 கோடி ரூபாய் வசூலை குவித்த நிலையில், ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நடிகை சமந்தா சமூக வலைதளம் வாயிலாக நன்றியை தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாகவே, திரைப்படங்களின் தொடக்க நாள் வசூல் பெரும்பாலும் ஆண் ரசிகர்களையே சார்ந்திருக்கிறது என்றும், தற்போது பெண் ரசிகர்களின் ஆதரவு புத்துணர்ச்சி அளிப்பதாகவும் சமந்தா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Related Link
இறுதி மூச்சு உள்ளவரை தவெகவில் பயணம் என மன்சூரலிகான் உறுதி

இறுதி மூச்சு உள்ளவரை தவெகவில் பயணம் என மன்சூரலிகான் உறுதி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹீரோயின்களுக்கு கூந்தல் அடர்த்தியான இருக்க காரணம் இதுதானாம்!

3
11 mins agoshare
Hair oil








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved