Also Watch
Read this
By: Manigandan Raja

காட்சி எதுவாயினும் வாழ்த்தும் கட்சி நான்
காட்சி எதுவாயினும் வாழ்த்தும் கட்சி நான் என குறிப்பிட்டு தனுஷின் நடிப்பு மற்றும் இயக்க பணிகளை பார்த்திபன் பாராட்டி பதிவிட்டுள்ளார். பாரதிராஜா, பாக்யராஜ் இருவருக்கும் நடக்கும் நினைவு உற்சவத்திற்கு அழைக்க சென்ற தினம் நண்பர் தனுஷின் பிறந்த நாளும் கூட எனவும், நடிப்பு, இயக்கம், தயாரிப்பு இன்னும் என நாலும் கை கூட அவரை வாழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
அபிஷன் ஜீவிந், சிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் புதிய படம்
நடிகர்கள் அபிஷன் ஜீவிந் மற்றும் சிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கும் இந்த படத்தில் யோக லட்சுமி, சிவானி நாகரம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் புதிய படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள I'M GAME

நஹாஸ் இயக்கத்தில் துல்கர் சல்மான், கயாடு லோஹர், மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள I'M GAME திரைப்படத்தின் டிரைலரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி வாழும் இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள I'M GAME, வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
DC திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பு
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வமிகா கப்பி நடிப்பில் உருவாகியுள்ள DC திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆவதால் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள DC, வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.