Also Watch
Read this
By: Manigandan Raja

தொடரின் "டைவா கோட்டிங்" வீடியோ பாடல் வெளியீடு
"வதந்தி - 2" வெப் சீரிஸ் தொடரில் இடம்பெற்றுள்ள "டைவா கோட்டிங்" என்ற வீடியோ பாடலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், முதல் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், 2-வது பாகத்தில் இயக்குநர் சசிகுமார் சப்-இன்ஸ்பெக்டர் மூசா ராசா என்ற அதிரடியான காவலர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
"பியார் பிரேமா கல்யாணம்" திரைப்படத்தின் அறிமுக வீடியோ

இயக்குநர் இளன் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் "பியார் பிரேமா கல்யாணம்" திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படம் ஆகஸ்ட் 21-ம் தேதி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த நிலையில், திரைப்படத்தின் கதாநாயகன் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
நயன்தாரா, கவின் நடித்துள்ள "ஹாய்" திரைப்படம்

நயன்தாரா, கவின் நடித்துள்ள "ஹாய்" திரைப்படத்தின் 3-வது பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. இந்த படத்தை விஷ்ணு எடவன் இயக்கத்தில், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.