news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அரசியல் ஆடுகளத்திற்கு தயாராகிறாரா நடிகர் தனுஷ்?
tv

Also Watch

tv

Read this

அரசியல் ஆடுகளத்திற்கு தயாராகிறாரா நடிகர் தனுஷ்?

மீம்ஸ் வெளியிட்டு வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

7

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சமீபத்தில், நடிகர் தனுஷ், ரசிகர் மன்றத்திற்கான கொடியை அறிமுகம் செய்துள்ளார். அதே நேரத்தில் மேடையில் ஓரமாக நின்ற தனது மகனை பார்த்து, "IF YOU ARE BAD, I AM YOUR DAD" என்றும் ரசிகர்களை பார்த்து, "இது என்ன திடீர்னு கூடுன கூட்டமா? இது கூட்டம் இல்ல குடும்பம், என் அசுர குடும்பம்," என்று பேசி இருந்தார்.

மகனுடன் விளையாட்டு...
அதே நேரத்தில், ’நானும் லிங்காவும் கேம் விளையாடும் போது, எப்பவுமே நான் ஜெயிச்சிட்டே இருப்பேன், அப்போ நான் போதும் லிங்கா கேம்-அ முடிச்சிக்கலாம்ன்னு சொன்னேன். ஆனா லிங்கா நான் ஜெயிக்கிற வர நீங்க விளையாடனும்பான்னு சொன்னான்.

இதன் மூலம் என்ன பிரச்சனை வந்தாலும் ஜெயிக்கிற வரைக்கும் மோதி பாத்திடனும்-ன்னு ஒரு மோட்டிவேஷன் லிங்கா கிட்ட இருந்து எனக்கு கெடச்சது,’ என்று பேசிருந்தாரு தனுஷ்.

Related Link
'தமிழினத்தலைவர்' தனுஷா? தமிழர்களுக்கு வந்த 'திடீர்' சோதனை

'தமிழினத்தலைவர்' தனுஷா? தமிழர்களுக்கு வந்த 'திடீர்' சோதனை

வைரலான பேச்சு
இப்படி தனுஷ் மேடையில் பேசிய ஒவ்வொரு பாயிண்ட்-ம் இணையத்தில் வைரலான நிலையில், அதை தற்போது நெட்டிசன்கள் மீம்ஸ்-களால் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அதில், லிங்காவோட கேம் விளையாண்டதை பத்தி தனுஷ் பேசிய கருத்தை போல், ஏற்கெனவே உலக புகழ்பெற்ற பேச்சாளரான Les Brown பேசிருந்தார் என்றும், ‘இப்போ நீங்க அதேயே காப்பி பேஸ்ட் பன்னிருக்கீங்களே,’ என்று தனுஷை விமர்சனம் செய்துள்ளனர்.

பதில் தரும் தனுஷ் ரசிகர்கள்
அதே மாதிரி, தனுஷ் மாரி படத்தில் பேசிய 'செஞ்சுடுவேன்'ன்னு சொன்ன டயலாக் போட்டோவை எடுத்து, அதை cm விஜய் சட்ட மன்றத்தில் செய்த 'முடிஞ்சது' என்ற செய்கையை போல் தனுஷ் 2031-ம் ஆண்டு முதலமைச்சர் ஆகி சட்டசபைக்கு வந்தா 'செஞ்சுடுவேன்'னு இந்த மாதிரிதான் செய்கை காட்டுவார் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

என்ன தான் இவங்க விமர்சனங்கள் செய்தாலும் தனுஷின் ரசிகர்கள் இந்த விமர்சன மீம்ஸ்க்கு எல்லாம் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

அரசியலுக்கு வருவது உறுதி
அதே மாதிரி, அவர் நடிக்கும் ஓம் படத்தில் வெளியான முதல் பாடலில் "கத்துற ஜனங்க கை ஓங்கணும், கட்டளை இட்டதும் தூள் ஆகணும், உத்தரவிட்டதும் அடி நொறுங்கணும், சத்தமே இல்லாம அது நடக்கணும்," என்று இடம் பெற்றுள்ள வரிகளின் பின்னால் இருக்கும் அரசியல் அப்புறம் தனுஷின் ரீசண்ட் ஸ்பீச்,

அதே மாதிரி அவரோட பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்ளுக்கு அவர் செய்த நலத்திட்ட உதவிகள் என, இதையெல்லாம் பார்க்கும் போது தனுஷ் அரசியலுக்கு வரத்தான் போகிறார் என்று இணையத்தில் பேசி வருகின்றனர்.

ஆனால், அரசியல் பயணம் குறித்து நடிகர் தனுஷ் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூயார்க் மேயர் மம்தானிக்கு நெதன்யாகு பதிலடி

3
15 mins agoshare
நெதன்யாகு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau