news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews தர்மன் படத்துல நடிக்க வாய்ப்பு வழங்குவதாக கூறி மோசடி
tv

Also Watch

தர்மன் படத்துல நடிக்க வாய்ப்பு வழங்குவதாக கூறி மோசடி

ஆகாஷ் காஸ்டியூம்ஸ்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தர்மன்

மோசடியில் ஈடுபட்டதாக புகார்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துட்டு வருது. இந்த நிலையில ‘தர்மன் படத்துல நடிக்க வாய்ப்பு தருவதா கூறி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துருக்கு. ‘ஆகாஷ் காஸ்டியூம்ஸ்’ என்ற பெயருல தாய்லாந்தில் நடைபெற உள்ள ‘தர்மன்’ படப்பிடிப்புல நடிக்க வாய்ப்பு வழங்கப்படுன்னும், அதுக்காக ஐடி கார்டுக்காக 12,500 ரூபா கொடுக்கனுன்னும் சமூக வலைதளங்களில் விளம்பரம் வந்துருக்கு.

அதுமட்டும் இல்லாம 18 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும் என்றும் கூறி மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட சிலர் தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்துருக்காங்க. சமூக வலைதளங்களில் பரவி வரும் சம்பந்தப்பட்ட ஃபோட்டோவ யார் வெளியிட்டாங்கன்னு போலீஸ்காரங்க வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியோட விசாரணை செஞ்சுட்டு வராங்க.

மண்டாடி குழுவினருக்கு கமல்ஹாசன் பாராட்டு

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்துல நடிகர் சூரி, சுஹாஸ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான 'மண்டாடி' படக்குழுவினரை கமல்ஹாசன் நேருல அழைச்சு பாராட்டியிருக்காரு.

இதுகுறித்து படத்தோட நாயகன் சூரி வெளியிட்டுள்ள பதிவுல "கமல் சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் சினிமா பயணத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய நம்பிக்கைன்னும், புதிய வெளிச்சம், வாழ்நாள் முழுவதும் என்னை வழிநடத்தும் ஆசீர்வாதன்னு நெகிழ்ச்சியோட சொல்லியிருக்காரு. .அதேபோல இயக்குநர் மதிமாறனும் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவிச்சுருக்காரு.

என்னது வெஜ்-ஆ, மதுரை ஸ்டைல் பரோட்டா சேலஞ்ச்

கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் டோரதி திரைப்படம் வரும் 25-ஆம் தேதி வெளியாக இருக்கு. இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைச்சருக்காரு. இந்த நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் ரிஷிகாந்த் - சனந்த் என மூணு பேருமா சேர்ந்து மதுரை ஸ்டைல் பரோட்டா சேலஞ்ச் புரொமோ வீடியோ வெளியிட்டு Fun செஞ்சருக்காங்க.

அந்த வீயோவுல பரோட்டாவ மதுரை ஸ்டைல்ல பிச்சு போட்டு சால்னாவ ஊத்தி ஒரு வாய் சாப்பிட்ட போது அது வெஜ் குழம்புன்னு சொல்லி எல்லாரும் சாப்புடாம தெறிக்க ஓடுற மாதிரி ஜாலியா ஃபன் பண்ணி இருக்காங்க.. இந்த வீடியோ வைரலான நிலையில ரசிகர்கள் உற்சாகத்துல இருக்குறாங்க.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தை போல டெல்லியிலும் "சிங்கப்பெண்" சிறப்புப்படை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved