Also Watch
Read this
By: Manigandan Raja

'கட்டா குஸ்தி 2' ஹீரோயினுக்கு கல்யாணமா?
2017ம் ஆண்டு மலையாள சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, அப்படியே 2019ம் ஆண்டு ஆக்ஷன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிருந்தாங்க. தமிழ்ல இவங்க, "ஜகமே தந்திரம், கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி, மாமன், தக் லைஃப்" என பல படங்கள் நடிச்சிருந்தாங்க.
அதேமாதிரி, ஜூலை 3-ம் தேதி வெளியாக இருக்கும் கட்டா குஸ்தி 2 படத்திலும் நடிச்சிருக்காங்க. இந்த நிலையில், சமீபத்தில் தனது திருமணம் குறித்து பேட்டி அளித்திருக்காங்க. அதில், "திருமணத்தில் நுழைய எனக்கு பல சிக்கல்கள் இருக்கிறது.
ஏன்னா, கட்டா குஸ்தி 2 படத்தில் ஒரு குழந்தையுடன் நெருக்கமாக இருந்துருப்பேன் அப்போ அதுல இருந்து என் தாய்மை உணர்வுகள் விழித்துக்கொண்டன.. எனக்காக வருபவன் நல்ல தந்தையாக இருப்பார்.. என்னை விட்டு ஓடிப்போக மாட்டார் குறைந்தபட்சம் என்னால் கணிக்கக்கூடிய ஒருவருடன் நான் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்.." என்று பேசிருக்காங்க.
Heart Beat-ல் இருந்து விலகிய முக்கிய புள்ளி

கடந்த 2024-ஆம் ஆண்டு ஜியோ ஹாட்ஸ்டாரில் தொடங்கிய Heart Beat வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுருந்துச்சு. அதை தொடர்ந்து சீசன் 2 தொடங்கிருந்தாங்க. அதுவும் நல்ல வரவேற்பை பெற்றுருந்துச்சு.
இந்த நிலையில், Heart Beat சீசன் 3 எப்ப வரும்னு ரசிகர்கள் காத்திட்டு இருந்த நிலையில, Heart Beat வெப் தொடரில் இருந்து நான் விலகுறேன்னு நடிகை தீபா பாலு தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டுருக்காங்க.
அதில், "சில இடங்கள... சில மனுஷங்கள... விட்டு போறது சுலபம் இல்ல.. ஆனா, சில 'குட்பை' நம்ம நல்லதுக்காக தான்.. Always Grateful மிக்க நன்றி.." என்று தெரிவிச்சிருக்காங்க. இவங்க, Heart Beat வெப் தொடர்ல கதையின் நாயகியாக 'ரீனா' என்கிற கதாபாத்திரத்தில் நடிச்சிருந்தாங்க என்பது குறிப்பிடத்தக்கது.
"எனக்கு நம்பிக்கை இருக்கு"

இந்தோ - அமெரிக்க புற்றுநோய் மருத்துவமனையின் 25 வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை மம்தா மோகன் தாஸ் புற்றுநோய் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில், "வாழ்க்கையில் சில போராட்டங்கள் நிஜம் தான்.
ஆனா அது நிரந்தரமாக இருக்காது என்று மட்டுமே நாம் நம்பலாம்.. புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஏற்படக்கூடிய மிக மோசமான விஷயம் என்னவென்றால் அவரை சுற்றி இத்தனை பேர் இருந்தாலும் தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று உணர்வது தான்.." என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "புற்று நோய்க்கு மருந்து இருக்கலாம்.. இல்லாமலும் போகலாம்.ஆனால் நிச்சயமாக நம்பிக்கை இருக்கிறது.." என்று பேசியுள்ளார். நடிகை மம்தா மோகன்தாஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீட்சா 4-ல் பிக்பாஸ் பிரபலம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், கருணாகரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'பீட்சா' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுருந்துச்சு. இந்தப் படத்தின் மூலம் கார்த்திக் சுப்புராஜ் இயக்குநராக அறிமுகமாகிருந்தாரு.
இதையடுத்து பீட்சா 2, 3 பாகங்கள் கூட வெளியாகிருந்துச்சு. இந்த நிலையில், பீட்சா 4 வருவதாகவும் இந்த படத்தை சி.வி. குமார் எழுதி தயாரிக்கிறதாகவும், ஸ்ரீஷ் விஜய் இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் படக்குழு தெரிவித்திருக்காங்க. அதே மாதிரி, இந்த பீட்சா 4-ம் பாகத்தில் பிக் பாஸ் பிரபலம் பிரஜின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறதா படக்குழு மோஷன் போஸ்டரை வெளியிட்டு பிரஜினை Tag செய்திருக்கிறாங்க
சோகத்தில் மூழ்கிய விக்ரம் ரசிகர்கள்
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில், நீண்ட காலமாக முடங்கிக் கிடக்கும் துருவ நட்சத்திரம் படத்தை ஜூன் 15-ம் தேதிக்குள் வெளியிட நீதிமன்றம்
ஏற்கெனவே உத்தரவிட்டிருந்துச்சு. இதன் பின், கூடுதல் அவகாசம் கேட்டு கவுதம் வாசுதேவ் மேனன் மனு தாக்கல் செய்திருந்தாரு.
இந்த நிலையில், "துருவ நட்சத்திரம்" திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து உத்தரவு பிறப்பித்திருக்காங்க. இதனால் படத்தின் மீது எதிர்பார்ப்புடன் காத்திட்டு இருந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி வருகிறாங்க
"டெக்ஸ்லா" திரைப்படத்தின் புதிய போஸ்டர்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் "டெக்ஸ்லா" திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுருக்காங்க. நடிகர் சூரஜ் வெஞ்சரமூடு பிறந்தநாளையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்த போஸ்டர் வெளியிட்டுருக்காங்க படக்குழு. கண்ணன் ரவி தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், நடிகர்கள் ஜெய் மற்றும் சூரஜ் வெஞ்சமூடு உள்ளிட்டோர் இந்த படத்துல முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறாங்க.
ஏற்கனவே, இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகிருந்துச்சு இந்த நிலையில் இந்த புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது
12 நாட்களில் இத்தனை கோடியா?

இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் கடந்த ஜூன் 19-ம் தேதி வெளியான எங்கள் தங்கம் திரைப்படத்தில் சமந்தா, கெளதமி, ஸ்ரீமுகி, குல்ஷன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிச்சிருந்தாங்க. இந்த படம் என்னதான் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தாலும், வசூலில் தொடர்ந்து அதிகரித்து வருதுனே சொல்லலாம்.
அதன் படி, படம் வெளியான 12 நாட்களில் உலகளவில் ரூ. 93 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகிருக்கு. அதே மாதிரி, வரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும்னு எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved