Also Watch
Read this
By: Manigandan Raja

(Courtesy : Rashmika_mandana)
அழகு மட்டுமல்ல ஆரோக்கியமும் முக்கியம்!
பொதுவாவே நம்ம இந்திய சினிமாவ பார்த்தோம்னா Heroes எல்லாரும் sustain ஆகி பல வருஷம் Field-ல இருப்பாங்க. ஆனா Heroines அப்படி கிடையாது. அடுத்தடுத்து செம்ம பிசியா ஒரு அஞ்சாரு படங்கள்ல நடிக்குற மாதிரி இருக்கும், அதுக்கு அப்பறம் இருக்குற இடம் தெரியாம போயிருவாங்க.
இதுக்கான காரணம் பற்றிதான் சமீபத்துல கூட ராஷ்மிகா மந்தனா ஒரு நேர்காணல்-ல பேசிருக்காங்க. அதுல என்ன சொல்றாங்கனா, “Heroines-க்கு அழகு, திறமைய காட்டிலும் ஆரோக்கியம்தான் முக்கியம்.
அதுதான் அடிப்படையும் கூட. இங்க heroes மாதிரி Heroines-உம் ரொம்ப நாளைக்கு சினிமாவுல இருக்கணும்னா அதுக்கு ஆரோக்கியம்தான் முக்கியம். முறையான உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கம் இத நமக்கு கொடுக்கும்.
அதனால சோம்பேறித்தனம் பார்க்காம பெண்கள் எல்லாருமே கட்டாயமா உடற்பயிற்சி பண்ணுங்க. கிடைக்குற நேரத்தில யோகா போன்ற பயிற்சியிலும் ஈடுபடுங்க” அப்படீன்னு சொல்லிருக்காங்க.
இவங்க டம்மி இல்ல கில்லி!

(Courtesy:கயாடு லோஹர்)
தமிழ்ல ‘டிராகன்’ திரைப்படம் மூலமா இளைஞர்களின் நெஞ்சங்கள கவர்ந்த நடிகைதான் கயாடு லோஹர். பார்க்க செம்ம கியூட்டா, ஸ்வீட்டா இருக்காங்களேன்னு நீங்க நினைக்கலாம். ஆனா இவங்களுக்குள்ளயும் ஒரு டெரர்ரான கயாடு ஒளிஞ்சிருக்காங்கனு சொன்ன ஷாக்கிங்கா இருக்குல.
இவங்க 10th Standard படிக்கும்போது டியூஷன் போறது வழக்கமாம். அப்போ ஒரு பையன் இவங்கள ஈவ்டீசிங் பண்ணிருக்காரு. முதல் ரெண்டு நாள் சைலண்டா போன கயாடுவுக்கு மூனாவது முறையும் அந்த பையன் கிண்டல் செஞ்சப்போ பயங்கர கோவம் வந்து, கீழ கிடந்த கல்ல எடுத்து அந்த பையனோட தலைலயே வீசிட்டாங்களாம்.
அந்த பையனும் தலைல ரத்தம் கொட்ட கொட்ட ஓடியே போயிட்டாராம். இத சமீபத்துல ஒரு நேர்காணல்ல பகிர்ந்த கயாடு, நான் பார்க்குறதுக்குதான் அமைதியா இருப்பேன். ஆனால் யாராவது தப்பு செஞ்சா என்னால பொருத்துக்கவே முடியாது. ஒன்னு எதிர்த்து நிக்கணும், தேவைப்பட்ட திருப்பி அடிக்கவும் செய்யணும்னு சொல்லிருக்காங்க!
மிரட்டல் காம்போவின் அதிரடி அப்டேட்!
தமிழ் சினிமா ஆடியன்ஸோட Mind Set-க்கு அப்பாற்பட்ட ஒரு இயக்குநர்னா, அது சாட்ஷாத் நம்ம மிஷ்கின் - தான். அதே மாதிரி ஹீரோ-னா கலரா கட்டுமஸ்தாதான் இருக்கணும்ங்குற Stereotype-அ உடைச்சு இப்படியும் இருக்கலாம்னு Prove பண்ணவரு விஜய் சேதுபதி.
இவங்க ரெண்டு பேரோட காம்போல உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘TRAIN'. ஒரே இரவுல ரயில்ல நடக்குற மர்ம சம்பவங்கள மையமா வச்சு உருவாகியிருக்கும் இந்த டார்க் த்ரில்லர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில பலத்த எதிர்பார்ப்பு இருக்கு.
இந்த படத்துல இன்னும் முக்கியமா சொல்லணும்னா கதையோட ஒரு பெரிய ஆணி வேரா நாசர் நடிச்சிருக்காரு. இந்த நிலையில் ‘TRAIN' படத்தோட டீசர் மற்றும் இசை விரைவில் வெளியாகும்னு படக்குழு ஒரு அப்டேட் கொடுத்திருக்காங்க. சமீபத்துல ஷ்ருதி ஹாசன் பாடுன ‘கன்னக்குழிக்காரா’ பாட்டு நல்ல வரவேற்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.
பாக்யராஜின் கடைசி திரைப்படம்!
இந்தியத் திரையுலகின் Screenplay King-னு அழைக்கக்கூடிய இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் உயிரிழப்பு மொத்த திரையுலகத்தையும் சோகத்துல ஆழ்த்தியிருக்கு. இந்த நிலையில பாக்யராஜ் நடிச்ச கடைசி படமான ‘TRUE STORY' வரும் செப்டம்பர் மாசம் முதல் வாரத்துல வெளியாவதா தகவல் கிடைச்சிருக்கு.
இந்த படத்துல பாக்யராஜ் ஒரு மர்மமான கொலை வழக்க விசாரிக்கக்கூடிய CBI அதிகாரியா நடிச்சிருக்காரு. ஒரு சிக்கலான கொலை சம்பவத்துல உண்மையான குற்றவாளிய கண்டுபிடிக்கும் துப்பறியும் அதிகாரியின் பயணமே இந்த படத்தோட மையக் கருத்தா அமைஞ்சிருக்கு.
குறிப்பா சொல்லணும்னா, ‘நான் சிகப்பு மனிதன்’ படத்துக்கு அப்பறம் திரும்பவும் துப்பறியும் கேரக்டர்ல பாக்யராஜ் நடிச்சிருக்குறது, படத்தின் மீதான எதிர்பார்ப்ப அதிகரிச்சிருக்குன்னுதான் சொல்லணும்!
இதுக்கு இல்லையா சார் ஒரு ENDuuuu!

2012-ஆவது வருஷத்துல கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல விஜய் சேதுபதி - ரம்யா நம்பீசன் நடிப்புல வெளியான ‘பீட்சா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்ப பெற்றுச்சு. என்னதான் அறிமுக இயக்குநரா இருந்தாலும் ஒரு வித்தியாசமான கதைக்களத்த கொடுத்து இவ்வளவு கம்மி பட்ஜெட்ல கூட இவ்வளவு த்ரில்லிங்கான படத்த குடுக்க முடியுமானு யோசிக்க வச்சவரு கார்த்திக் சுப்புராஜ்.
ஆனா அதுக்கு அடுத்ததா வந்த பீட்சா 2 மற்றும் 3-ஆவது பாகங்கள்... Slice போடும்னு பார்த்தா... கிண்டி ஜூஸாக்கி வச்சிருப்பாங்க. என்ன டீமு என்ன மேட்சுன்னு தெரியாத அளவுக்கு ரெண்டு பாகங்களையும் சொதப்பி வச்சிருப்பாங்க.
சரி இதுதான் workout ஆகலயே அத அப்படியே நிறுத்துவோம்னு நிறுத்தாம இப்போ அடுத்த பீட்சா படத்தோட 4-ஆவது பாகம் வரப்போகுது. சி.வி.குமார் இயக்கத்துல உருவாகும் இந்த படத்தோட மோஷன் போஸ்டர் அண்மையில வெளியாகியிருக்கு. இந்த படத்தையாச்சும் Slice போடுறாங்களா இல்ல ஜூஸ் போடுறாங்களானு பொறுத்திருந்துதான் பாக்கணும்.
ரிஸ்க் எடுத்து நடித்திருக்கும் அஞ்சலி!

நடிகர் விஷால் இயக்கி நடிக்கும் ‘மகுடம்’ படத்தோட டீசர் வெளியானதுல இருந்தே ரசிகர்கள் மத்தியில ஒரு பலத்த எதிர்பார்ப்பு நிலவியிருக்குன்னுதான் சொல்லணும். இந்த படத்துல அஞ்சலி ஒரு முக்கியமான கதாபாத்திரத்துல நடிச்சிருக்காங்க. படத்தோட டீசர்லயே பாத்திருப்போம், வாய்ல கத்தி வச்சிட்டு ஒரு பயங்கரமான சண்டைக்கு தயாராகி இருக்குற சீன் மிரட்டலா இருந்துச்சு.
இந்த நிலையில தன்னோட கேரக்டர பத்தி பேசியிருக்கும் அஞ்சலி, “மகுடம் படத்துல ஒரு வலிமையான மற்றும் அழகான கேரக்டர்ல நடிச்சிருக்கேன். விஷால் கூட எனக்கு 15 வருஷ நட்பு இருக்கு.
ரொம்ப ரிஸ்க் எடுத்து நானும் விஷாலும் ஒரு சீன்ல நடிச்சிருக்கோம். அதுல எனக்கு கால்-ல கூட அடி பட்டிருச்சு” அப்படீன்னு சொல்லிருக்காங்க. இவங்க பில்ட் அப் குடுக்குற அளவுக்கு படம் வொர்த்தா இல்லையானு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved