Also Watch
Read this
By: Manigandan Raja

நான் இயக்குநரா அறிமுகமானதுக்கு காரணமே இதுதான்! - உண்மையை உடைத்த நடிகர் விஷால் :
நடிகர் விஷால் இயக்கி நடிக்கும் ‘மகுடம்’ படத்தோட டீசர் வெளியானதுல இருந்தே ரசிகர்கள் மத்தியில ஒரு பலத்த எதிர்பார்ப்பு நிலவியிருக்குன்னுதான் சொல்லணும். இந்த படத்துல ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னனா, படத்த முதல் முதலா இயக்க தொடங்கியது ‘ஈட்டி’, ‘ஐங்கரன்’ உள்ளிட்ட திரைப்படங்கள இயக்கிய ரவி அரசு-தான்.
ஆனா பாதி shooting-லயே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமா, ரவி அரசு படத்துல இருந்து விலக, அத அப்படியே டேக் ஓவர் செஞ்சு இந்த படத்தின் மூலமா இயக்குநரா அறிமுகம் ஆகியிருக்காரு விஷால். இதபற்றி சமீபத்துல பேசுன அவரு, ‘இந்த படத்துல வர்ற ஒவ்வொரு சீனையும் நான் செதுக்கி செதுக்கி எடுத்துருக்கேன்.
ஆனா என்னதான் திரைக்கதையில நான் கொஞ்சம் மாற்றங்கள் பண்ணியிருந்தாலும், கதைக்கான அங்கீகாரத்த நான் ரவியரசுக்குதான் கொடுத்திருக்கேன். அவருக்கான சம்பளத்தையும் கொடுத்திருக்கேன்” அப்படீன்னு சொல்லிருக்காரு.
மீண்டும் சூர்யா கையில் ‘மைக்’ :

‘கருப்பு’ படத்தோட பிளாக் பஸ்டர் வெற்றிய தொடர்ந்து, அடுத்ததா சூர்யா நடிப்புல வர இருக்கும் படம்தான் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ’. ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ உள்ளிட்ட படங்கள இயக்கிய வெங்கி அட்லூரிதான் இந்த படத்தையும் இயக்கியிருக்காரு.
சூர்யாவுக்கு ஜோடியா மமிதா பைஜு நடிச்சிருக்குறதுனாலயும், ஒரு வித்தியாசமான கதைக்களம் இருப்பதாலயும், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில ஏகபோகமாவே இருக்குது. சமீபத்துல வெளியான இந்த படத்தோட ‘பட்டாம்பூச்சி’ பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சுச்சுன்னே சொல்லலாம்.
இந்த நிலையில கென் கருணாஸ் வரிகள்ல.. சூர்யா ஒரு பாடல் பாடுவதா இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் புகைப்படம் வெளியிட்டு அறிவிச்சிருக்காரு. அஞ்சான் படத்துக்கு அப்பறம் சூர்யா குரல்-ல ஒரு பாட்டா..னு ரசிகர்கள் இந்த பாட்டோட வெளியீட்டுக்காக ரொம்பவே ஆர்வமா காத்துட்டு இருக்காங்க.
படத்துல கிராபிக்ஸ்தான் ரொம்ப முக்கியம் :

இதுநாள் வரைக்கும் ஒரு Bold-ஆன Glamour-ஆன நயன்தாராவ மட்டுமே பார்த்துட்டு இருந்த நம்ம... மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் மூலமா தெய்வீகமா.. ஒரு அம்மனா பார்த்தோம்! இதுக்கான முழு கிரெடிட்ஸ் RJ பாலாஜியவே சேரும். ஆனா மூக்குத்தி அம்மனோட 2-ஆம் பாகத்த சுந்தர் சி இயக்கியிருக்காரு.
படத்தோட ஷூட்டிங் சமீபத்துல நிறைவடைஞ்ச நிலையில, இப்போ பின்னணி பணிகள் ரொம்பவே விறுவிறுப்பா நடத்துட்டு வர்றதா படக்குழு தெரிவிச்சிருக்கு. சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டுல உருவாகியிருக்கும் இந்த படத்துல கிராபிக்ஸ் காட்சிகளுக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்துட்டு வர்றாங்களாம்.
ஒவ்வொரு கிராபிக்ஸ் காட்சியவும் பார்த்து பார்த்து உருவாக்கிட்டு வர்றதுனால அதிக நேரம் தேவைப்படுதுன்னும்... இதனால மூக்குத்தி அம்மன் - 2 திரைப்படம் அடுத்த ஆண்டுதான் வெளியாகும்னும் திரையுலக வட்டாரங்கள்ல தகவல் பரவிட்டு வருது.
பாக்யராஜ் மகளின் வேதனை பதிவு :

இந்தியத் திரையுலகின் Screenplay King-னு அழைக்கக்கூடிய இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் உயிரிழப்பு மொத்த திரையுலகத்தையும் சோகத்துல ஆழ்த்தியிருக்கு. இந்த நிலையில பாக்யராஜின் மகள் சரண்யா பாக்யராஜ் ரொம்பவே எமோஷனலா ஷேர் பண்ணியிருக்கும் ஒரு சோஷியல் மீடியா பதிவு இப்போ பலரையும் கண்கலங்க வச்சிருக்கு.
அதுல அவங்க தன்னோட அப்பா பாக்யராஜ் தனக்கு தினந்தோறும் பண்ணிருக்கும் Call Logs Screenshot-அ ஷேர் பண்ணி, “இனிமேல் என்னோட தினசரி Call Log இப்படி இருக்கப்போறது இல்ல. என்னோட அதிகபட்ச மிஸ்ட் கால்ஸ் எல்லாமே உங்ககிட்ட இருந்துதான் வந்திருக்குன்னு நான் இப்போதான் உணர்றேன்”னு ரொம்பவே உருக்கமா தன்னோட மனவேதனைய வெளிப்படுத்திருக்காங்க.
ஒரு அப்பா தன்னோட மகள் கிட்ட தினமும் எத்தன டைம் பேச முயன்றாரு, எவ்வளவு அக்கறையோட இருந்தாருன்னு ஒரு சாதாரண மிஸ்ட் கால் சொல்லிரும்னு ரசிகர்கள் நெகிழ்ச்சியோட கருத்து தெரிவிச்சிருக்காங்க.
பேக் டூ பேக் சூர்யா படம்தான்!

டி.ஜே. ஞானவேல் இயக்கத்துல சூர்யா நடிக்கும் 48-ஆவது திரைப்படத்த ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்குறதா அதிகாரப்பூர்வமா அறிவிச்சிருக்காங்க. 'ஜெய் பீம்' வெற்றிக்குப் பிறகு சூர்யா - டி.ஜே. ஞானவேல் கூட்டணி மீண்டும் இணையுறதுனால, இந்த படமும் வலுவான கதைக்களத்துடன் உருவாகும்னு ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்துட்டு இருக்காங்க.
‘டிராகன்’ மூலமா தனக்குன்னு ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருக்கும் நடிகை கயாடு லோஹர், இந்த படத்துல சூர்யாவுக்கு ஜோடியா நடிக்குறாங்களாம்! இது ஒரு கதைய மையப்படுத்தப்பட்ட திரைப்படமா இருந்தாலும், இப்போ அறிவிக்கப்பட்டிருக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியலைப் பார்க்கும்போது, முழுமையான கமர்ஷியல் அம்சங்கள் கலந்த பிரம்மாண்டமான படமா இருக்குமோனு தான் ஒரு சந்தேகம் எழுந்திருக்கு.
வேற நடிகையா இருந்தா யோசிச்சிருப்பாங்க!

சமீபத்துல ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரீத்தி முகுந்த் உள்ளிட்டோர் நடிப்புல பேக் டூ பேக் சண்டைக் காட்சிகளோட பக்கா மாஸா வெளியான படம்தான் ‘பிளாஸ்ட்’. படத்தோட டைட்டில் மாதிரியே படம் முழுக்கவே பக்கா பிளாஸ்டா-தான் இருந்திச்சு. எந்த காதல் காட்சிகள்லயும் இல்லாம முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகள்ல சிறப்பான நடிப்ப வெளிப்படித்தி ரசிகர்களோட மனச கவர்ந்திருக்காங்க பிரீத்தி முகுந்த். இந்த நிலையில இவங்க கொடுத்திருக்கும் பேட்டிதான் இப்போ வைரலாகிட்டு இருக்கு.
அதுல அவங்க என்ன சொல்லிருக்காங்கனா.. “பிளாஸ்ட் கதைய தேர்ந்தெடுத்ததே ஒரு வித்தியாசமான முடிவுதான். என் இடத்துல வேற எதாவது நடிகை இருந்திருந்தா கண்டிப்பா இந்த ரோல் பண்ண யோசிச்சிருப்பாங்க. எனக்கு ஆக்ஷன் கதாபாத்திரங்கள்ல நடிக்க ரொம்ப புடிக்கும்.
இந்த படத்துக்காக ரசிகர்கள் கிட்ட இருந்து எனக்கு கிடைச்ச பாராட்டும் அன்பும் எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு”ன்னு நெகிழ்ச்சி தெரிவிச்சிருக்காங்க. இதுமட்டும் இல்லாம அடுத்ததா இதயம் முரளி படத்துல இவங்க பண்ணியிருக்கும் கதாபாத்திரம் வித்தியாசமானது என்றும் இதுவும் ரசிகர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்னும் சொல்லிருக்காங்க!
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved