Also Watch
Read this
By: Manigandan Raja

குழந்தையை பாதுகாப்பாகப் பிறக்க உதவிய தன்னார்வலர்கள் :
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால், ஆயிரக்கணக்கானோர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ள நிலையில், கர்ப்பிணி ஒருவர் இடிபாடுகளுக்கு உள்ளே ஆண் குழந்தையை பிரசவித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மருத்துவர்கள், மருத்துவ வசதிகள், மின்சாரம் ஏதுமற்ற நிலையில், தன்னார்வலர்கள் டார்ச் விளக்குகளைப் பயன்படுத்தி இடிபாடுகளுக்கு இடையே அக்குழந்தையைச் பாதுகாப்பாகப் பிறக்க உதவினர். தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயற்கை பேரிடர்களில் சிக்கித் தவிக்கும் வெனிசுலா :

வெனிசுலாவின் பெரும் பகுதிகளை தாக்கிய இரட்டை கொடிய நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் அந்நாட்டை பேரழிவுக்குள்ளாக்கியுள்ளது.
பல மணிநேர கனமழையால் போர்த்துகீசா ((Portuguesa)) மாநிலத்தில் உள்ள மொன்செனோர் ஜோஸ் விசென்டே டி உண்டா ((Monseñor José Vicente de Unda )) நகராட்சியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளும் ஓடைகளும் பெருக்கெடுத்து ஓடியதால், வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகள் நீரில் மூழ்கின.
ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மையம், WHO இணைந்து நடவடிக்கை :
எபோலா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் கண்டங்கள் அளவிலான மேலாண்மை ஆதரவுக் குழுவை, ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமும், உலக சுகாதார அமைப்பும் இணைந்து தொடங்கியுள்ளன.
உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் உள்ள மகரேரே பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட இந்த குழு, உகாண்டா, காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் அண்டை நாடுகளில் எபோலா அபாயத்தில் இருக்கும் நாடுகளுக்கு ஆதரவளிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே குழு, ஒரே திட்டம், ஒரே நிதிநிலை அறிக்கை என்ற கொள்கைகளால் வழிநடத்தப்படும் இந்த குழு, பிராந்தியம் முழுவதும் நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக கண்காணிப்பு, ஆய்வக அமைப்புகள், நோயாளிகள் மேலாண்மை, நோய்த்தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, அவசரகால தளவாடங்கள் மற்றும் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை ஒன்றிணைக்கும்.