news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews 3 நாட்களில் 9 இந்திய கப்பல்கள் ஹோர்மூஸை கடந்தன
tv

Also Watch

tv

Read this

3 நாட்களில் 9 இந்திய கப்பல்கள் ஹோர்மூஸை கடந்தன

ஹோர்முஸ் நீரிணை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஹோர்முஸ் நீரிணை

இன்னும் 15 கப்பல்கள் பயணத்திற்கு தயாராக உள்ளன :

அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் மத்திய கிழக்கில் பதற்றம் குறையாத நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டும் 9 இந்திய வணிக கப்பல்கள்  ஹோர்முஸ் நீரிணையை கடந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 15 கப்பல்கள் இந்தியா வருவதற்காக மத்திய கிழக்கு நாடுகளில் தயார் நிலையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கனமழை வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு :

அருணாச்சல பிரதேசத்தில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். தொடர் மழை கிழக்கு சியாங் மாவட்டத்தில் பாலம் வெள்ளத்தில் சேதமடைந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதேபோல், மற்றொரு பகுதியில் மீட்பு பணியின் போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், ஊழியர்கள் பதற் அடித்துக் கொண்டு ஓடிய வீடியோ வெளியாகியுள்ளது.

பாதுகாப்பான இந்திய பெருங்கடல் பிராந்தியத்தை உருவாக்குவோம் :

இந்தியப் பெருங்கடல் இந்தியாவையும் செஷல்ஸையும் பிரிப்பதில்லை; மாறாக இரு நாடுகளையும் இணைப்பதாக பிரதமர் மோடி கூறினார். அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றிய அவர், கடல்சார் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது, பாதுகாப்பான மற்றும் நிலையான இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை உருவாக்கும் முயற்சியை ஊக்குவிக்கும் என்றார்.

மொரீஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலமுடன் பிரதமர் மோடி சந்திப்பு :

செஷல்ஸ் நாட்டு சுற்றுப்பயணத்தில் போது, மொரீஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலமுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா- மொரீஷியஸ் இடையிலான கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்த தோடு திறன் மேம்பாடு, பாதுகாப்பு, எரிசக்தி, இணைய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனர்.


Related Link
மும்பையின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை

மும்பையின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

படத்தோட கதையவே மாத்திட்டேன்

0
10 mins agoshare
நடிகர் விஷால்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau