Also Watch
Read this
By: Manigandan Raja

அமெரிக்காவின் அத்துமீறிய தாக்குதல்களுக்கு கண்டனம் :
அமெரிக்காவின் அத்துமீறிய தாக்குதல்கள் தொடர்ந்தால் அமைதி பேச்சுவார்த்தையை முழுமையாக நிறுத்துவோம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொடுத்த வாக்குறுதிகளுக்கு அமெரிக்கா துளியும் மதிப்பளிக்காது என்பதை இந்த புதிய தாக்குதல்கள் உணர்த்துவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுப்பாட்டுக்கு சவால் விடும் எந்தவொரு முயற்சியும் பதற்றத்தை அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் கனமழை வெள்ளம் :

அமெரிக்காவின் கென்டக்கி (( kentucky )) மாநிலத்தில் ஒரே நாளில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக மாறின..! குடியிருப்புகள், கட்டடங்கள், சாலைகள் என கண்ணுக்கு எட்டும் தூரம் வரை அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து தடைபட்டு, அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4 பேர் பலியான நிலையில், மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
ஹிஸ்பொல்லா அமைப்பை சிரியா தான் கையாள வேண்டும் :

லெபனானில் உள்ள ஹிஸ்பொல்லா அமைப்பை சிரியா தான் கையாள வேண்டும் என டிரம்ப் தெரிவித்தது இஸ்ரேல் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற இந்த அமைப்புக்கு எதிரான இஸ்ரேலின் போரில் வெள்ளை மாளிகைக்கு அதிருப்தி அதிகரித்துள்ள நிலையில் அதிபர் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், சிரிய அதிபர் பஷார் அல்-அசாத் (Ahmad al-Sharaa) தனது அரசு இதில் தலையிடத் திட்டமிடவில்லை என்று கூறியுள்ளார்.