Also Watch
Read this
By: Manigandan Raja

முதல் முறையாக காங்கோ, கேப் வெர்டே அணிகள் தேர்வு :
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய 10 ஆப்பிரிக்க அணிகளில் 9 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தேர்வாகி புதிய வரலாறு படைத்துள்ளன. அல்ஜீரியா, கேப் வெர்டே, காங்கோ, ஐவரி கோஸ்ட், எகிப்து, கானா, மொராக்கோ, செனகல், தென்னாப்பிரிக்கா, துனிசியா ஆகிய அணிகள் பங்கேற்றதில் துனிசியா மட்டுமே வெளியேறியுள்ளது.
இதில், காங்கோ, கேப் வெர்டே ஆகிய அணிகள் முதல்முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தேர்வாகியிருப்பது கவனம் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக, 6 ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு தேர்வாகியுள்ளன.
வங்கதேசத்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றி :

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் 29-வது லீக் போட்டியில், வங்கதேச அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் கனடா வெற்றி :
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கனடா அணி 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாதியில் இரு அணிகளுமே போராடியும் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில் சமநிலை வகித்தன.
தொடர்ந்து கூடுதல் நேரத்தின் 2வது நிமிடத்தில் கனடா வீரர் ஸ்டீபன் எஸ்டாக்கியோ ((Stephen Eustáquio)) ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் கனடா அணி 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வென்றது.