Also Watch
Read this
By: Manigandan Raja

புதிய வரலாற்று சாதனை படைத்த இந்திய ராணுவ வீரர்கள் :
உலகக் கோப்பை படகு போட்டியில் தங்கம் வென்று இந்திய ராணுவ வீரர்கள் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் லுகெர்னே நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை படகு போட்டியில் இந்திய அணி சார்பில் ராணுவ வீரர்கள் லக்ஷய் மற்றும் உஜ்வால் குமார் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஜோடி, 2 ஆயிரம் மீட்டர் தூரத்தை 6 நிமிடம் 26 விநாடிகள் 9 மணித்துளிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றனர். 2-வது இடத்தை ஹாங்காக் வீரர்களும், 3-வது இடத்தை நெதர்லாந்து வீரர்களும் பெற்றுள்ளனர். உலகக் கோப்பை படகு போட்டி தொடர்களில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
தொடரிலிருந்து வெளியேறிய இந்திய அணி :
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி தொடரிலிருந்து வெளியேறியது.
இந்தியாவை வீழ்த்தி அசத்தலாக வென்ற அயர்லாந்து :

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. வடக்கு அயர்லாந்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.