Also Watch
Read this
By: Manigandan Raja

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் அவப்பொழுது காலநிலை மாறி வருவது வழக்கமான ஒன்றாகும். இந்த நிலையில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் தற்போது திடீரென நண்பகல் வேளையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாக போதிய மழை இல்லாத நிலையில் கொடைக்கானலில் தண்ணீர் தட்டுபாடு ஏற்படும் சூழல் இருந்த நிலையில் தற்போது பெய்த இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் மலை கிராமங்களில் தற்போது பயிரிடப்பட்டுள்ள பீட்ரூட், முள்ளங்கி, முட்டை கோஸ், உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் பயிரிடக்கூடிய நிலையில் தற்போது தினம்தோறும் மாலை நேரங்களில் பெய்து வரும் மழையினால் விவசாய நிலங்கள் ஈரத்தன்மையுடன் காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.