news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவை
tv

Also Watch

tv

Read this

சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவை

நாகை - தேவூர்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அடிப்படை வசதிகள்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவூர் தேன்மொழி நகரில் சுமார் 50 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. மொத்தம் 5 வீதிகளாக உள்ள இந்த நகரில் சாலை, மின்சாரம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லையென அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக நகரில் உள்ள 5 தெருக்களிலும் சாலையானது பிரதான சாலையில் இருந்து 10 அடிக்கும் கீழே உள்ளதால் குழந்தைகள், முதியவர்கள் மேலே ஏறி வர முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் இருச்சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களை பிரதான சாலையில் இருந்து தங்களது வீடுகளுக்கு ஓட்டி செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. வீடுகள் முழுவதும் பள்ளத்தில் இருப்பதாலும் முழுவதும் மண் சாலையாக மட்டுமே இருப்பதால் மழைக்காலங்களில் நடக்க முடியாமலும் உள்ளதாகவும் , தண்ணீர் தேங்கி நிற்பதாகவும் வேதனையோடு கூறுகின்றனர்.

தங்களது குடியிருப்பு பகுதிக்கு அனைத்து அரசு அங்கீராமும் கிடைத்தும் எந்த வித அடிப்படை வசதி செய்து தராமல் உள்ளதாகவும், இது குறித்து அனைத்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறும் பொதுமக்கள் தங்களது நகரில் உள்ள அனைத்து தெருக்களிலும் பிரதான சாலை மட்டத்தில் தார் சாலை அமைத்து , மின்சார வசதி, பூங்கா, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு

குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈஃபிள் கோபுரத்தை தாக்கிய மின்னல்

0
5 mins agoshare
மின்னல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau