news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியின் போது மழை
tv

Also Watch

tv

Read this

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியின் போது மழை

ராணிப்பேட்டை - வாலாஜாபேட்டை

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பொதுக்கூட்டத்தில் கனமழை

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை மத்திய ஒன்றியத்திற்குட்பட்ட வன்னிவேடு ஊராட்சி பகுதியில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வாலாஜா மத்திய ஒன்றியத்தின் சார்பாக மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு.

மத்திய ஒன்றிய செயலாளர் தினேஷ் ஏற்பாட்டில் நிகழ்விற்கு மேற்கு மாவட்ட செயலாளர் பூக்கடை விஜய் மோகன் தலைமையில் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கபில் ஆகியோர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் தவெக கட்சி தொண்டர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களுக்கு புடவை, வேட்டி, அயன் பாக்ஸ் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் அதேபோல் மற்றும்
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டன.


இந்த நிலையில் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கனமழை வெளுத்து வாங்கியது இருப்பினும், மழையை பொருட்படுத்தாமல் கட்சியின் மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் அனைவரும் நிகழ்விடத்தை விட்டு செல்லாமல் நாற்காலிகளை தங்களது தலையில் கவிழ்த்துப் பிடித்தபடி மழையில் அதே இடத்தில் நின்றனர்.

அதன்பின் மழை நின்ற பின்னர் மீண்டும் நிகழ்ச்சி தொடர்ந்து தவெக கட்சி தொண்டர்கள் பொதுமக்களுக்கு எண்ணற்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கனமழையையும் பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடி விழாவை நடத்தி முடித்த தவெக கட்சி நிர்வாகிகளின் செயலை கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டினார்கள்.

Related Link
கனமழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கனமழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உலகக் கோப்பை படகு போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்

3
27 mins agoshare
உலகக் கோப்பை படகு போட்டி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau