Also Watch
Read this
By: Manigandan Raja

மதுரை - ராமநாதபுரம் நான்கு வழிசாலையில் கனமழை காரணமாக அடுத்தடுத்து இரண்டு தனியார் பஸ்கள் விபத்திற்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மானாமதுரையில் இன்று மாலை சுமார் ஒரு மணி நேரம் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
மதுரை -ராமநாதபுரம் நான்கு வழி சாலையில் மழை காரணமாக சாலை மற்றும் சாலையோரம் ஈரமாக இருந்தது. இன்று மாலை பரமக்குடியில் இருந்து இரண்டு தனியார் பஸ்கள் அடுத்தடுத்து மதுரை நோக்கி கிளம்பின.
மானாமதுரை அருகே மேல பசலை என்ற இடத்தில் வரும் போது முன்னாள் சென்ற ஆட்டோவை முந்த முயன்ற சிந்தா என்ற தனியார் பஸ் வலது பக்கம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

அருகில் இருந்த கிராம மக்கள் பஸ்ஸின் முன்புற கண்ணாடியை உடைத்து பயணிகளை மீட்டனர். இந்த விபத்து மீட்பு பணி நடந்து கொண்டிருந்த போது மற்றொரு தனியார் பேருந்து பேரிங்
கட்டாகி இடதுபுற சாலையோர பள்ளத்தில் சிக்கி விபத்திற்குள்ளானது.
இரண்டு பேருந்துகள் அடுத்தடுத்து விபத்திற்கு உள்ளானதில் பயணிகள் காயமடைந்து நடுரோட்டில் நின்றனர். சிவகங்கை, , திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்கள் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் விபத்து குறித்து மானாமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.