news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இடி மின்னல் தாக்கி அரசுப்பள்ளி கட்டடம் இடிந்து விபத்து
tv

Also Watch

tv

Read this

இடி மின்னல் தாக்கி அரசுப்பள்ளி கட்டடம் இடிந்து விபத்து

அலங்காநல்லூர், மதுரை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அரசுபள்ளி கட்டிடம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரிஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் சுமார் 120 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவில் பள்ளி கட்டிடத்தின் மீது இடி, மின்னல் தாக்கியதில் பள்ளி கட்டிடத்தில் மையப் பகுதியில் உள்ள சமயலறை மேற்கூடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் மேற்கூரை முற்றிலும் இடிந்து விழுந்து சேதமடைந்தது.


இன்று பள்ளி விடுமுறை தினம் என்பதால் மாணவ மாணவிகள் யாரும் பள்ளிக்கு வராததால் பெரும் அசம்பாவிதம் மற்றும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் பள்ளி கட்டிடத்தின் இரு புறங்களிலும் செயல்படும் வகுப்பறை கட்டிடங்கள் பழமையானதாகவும், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்படும் அபாய நிலையில் பள்ளி கட்டிடம் உள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டி தர வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

Related Link
அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம்போல் தேங்கிய வெள்ளம்

அரசு மருத்துவமனை வளாகத்தில் குளம்போல் தேங்கிய வெள்ளம்

                   
              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் புதிய வரலாறு

0
7 mins agoshare
உலகக் கோப்பை கால்பந்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau