news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news செஷல்ஸ் பிள்ளையார் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு
tv

Also Watch

tv

Read this

செஷல்ஸ் பிள்ளையார் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

காந்தியடிகளுக்கு பிரதமர் மரியாதை

12

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

செஷல்ஸ் நாட்டின் விக்டோரியா நகரில் உள்ள நவசக்தி பிள்ளையார் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். தமிழர்கள் இணைந்து கட்டிய கோயிலில் தவில், நாதஸ்வரம் இசைக்க மனமுருக வேண்டிக் கொண்டார்.

இந்திய படைகளுக்கு மரியாதை
செஷல்ஸ் நகரின் விக்டோரியாவில் உள்ள அமைதிப் பூங்காவில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது, அண்ணல் காந்தியடிகளின் சிலைக்கு மலர் தூவி, பிரதமர் மோடி வணங்கினார்.

செஷல்ஸ் நாட்டின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தின் போது இந்திய படைகளுக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, அணிவகுப்பில் பங்கேற்ற நமது நாட்டின் வீரர்கள் தேசியக் கொடியினை ஏந்தி வந்த போது எழுந்து நின்று மரியாதை செலுத்தினார்.

பூரண கும்ப மரியாதை
செசல்ஸ் நாட்டில் தமிழர்கள் கட்டிய நவசக்தி விநாயகர் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார்.

3 நாள் பயணமாக செசல்ஸ் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் 50ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். அதன்பிறகு, விக்டோரியா நகரில் தமிழர்கள் கட்டிய நவசக்தி விநாயகர் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். கோவிலுக்கு சென்ற பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், கோவிலுக்கு வெளியே திரண்டிருந்த இந்திய வம்சாவழியினரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

Related Link
பிரதமர் மோடிக்கு ஷெசெல்ஸ் நாட்டின் மிக உயரிய விருது

பிரதமர் மோடிக்கு ஷெசெல்ஸ் நாட்டின் மிக உயரிய விருது



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் புதிய வரலாறு

0
7 mins agoshare
உலகக் கோப்பை கால்பந்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau