Also Watch
Read this
By: Manigandan Raja

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் சுமார் 6000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.
இங்கு சில நாட்களாக குடிநீரில் துர்நாற்றம் வீசி அசுத்தமாக வருவதாக அதிகாரிகள் மற்றும் தொகுதி MLA ஈ.சி.ஆர். பி.சரவணன் அவர்களிடம் புகார் அளித்ததாக பொதுமக்கள் கூறினர் ஆனால் தொகுதி MLA அவர்களிடம் புகார் அளித்தும் எங்களுடைய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என MLA மீது பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.