Also Watch
Read this
By: Manigandan Raja

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டியில் சீனி என்பவருக்கு சொந்தமான ஆர். பி. பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு வழக்கம் போல் ஞாயிற்று கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு பட்டாசு ஆலை மூடி கிடக்கிறது.
இந்திலையில் மாலை நேரம் திடீரென பட்டாசு ஆலையில் ஒரு அறையில் உராய்வு காரணமாக எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டு அறைகள் வெடித்து சிதறி விபத்து
ஏற்பட்டது. மேலும் இந்த ஆலை வெடிவிபத்தில் 7 அறைகள் தரை மட்டமாகி சிதறி நாசமானது.

மேலும் தகவல் அறிந்து விரைந்து வந்த ரொம்ப கோட்டை தீயணைப்புத் துறையினர் மற்றும்சிவகாசி தீயணைப்பு துறையினர் சாத்தூர் இணைப்பு துறையினர் தீயை அணைக்கும்
பணியில் ஈடுபட்டனர் மேலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பட்டாசு ஆலை மூடப்பட்டிருந்த நிலையில் ரசாயன பொருட்களில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் இந்த வெடி விபத்தில் 7க்கும் மேற்பட்ட அறைகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.