news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஈஃபிள் கோபுரத்தை தாக்கிய மின்னல்
tv

Also Watch

tv

Read this

ஈஃபிள் கோபுரத்தை தாக்கிய மின்னல்

பாரீஸ் - பிரான்ஸ்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மின்னல்

பிரான்ஸில் வெப்ப அலை தாக்கிய நிலையில் திடீர் மழை :

பிரான்ஸ் தலைநகர் பாரீஸின் அடையாளமாக திகழும் உலகப் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரத்தின் மீது மின்னல் தாக்கிய அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கடந்த சில நாட்களாக பிரான்ஸில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வரலாறு காணாத வெப்ப அலை நிலவி வந்தது. இந்த சூழலில், பாரீஸ் நகரில் காற்று மற்றும் இடி, மின்னுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, வானத்தையே பிளப்பதுபோல தோன்றிய மின்னல் ஒன்று, ஈஃபிள் கோபுரத்தின் உச்சியில் பாய்ந்தது.

வெப்ப அலை: பிரான்ஸில் இதுவரை 1,000 பேர் பலி :

பிரான்சில் வெப்ப அலையால் இதுவரை ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளதாகவும், கடந்த ஆண்டை விட பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பேசிய அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஸ்டெபானி ரிஸ்ட், முழுமையான பாதிப்பு இன்னும் வெளிப்படவில்லை என்றார்.

வெப்ப அலையால் நாடு முழுவதும் சாதனை அளவாக வெப்ப நிலை பதிவாகி உள்ளதாகவும், பாரீஸ் நகரில் 40.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பெரிய அளவில் பொது சுகாதார நெருக்கடி ஏற்பட்டு 72 துறைகள் ரெட் அலர்ட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பாகிஸ்தான் கார் குண்டுவெடிப்பு- இந்தியா மீது அபாண்டம் :

பாகிஸ்தானின் தொழில் தலைநகரான கராச்சியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் இந்தியா மீது பழி சுமத்தியதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானால் பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்குப் பதிலாக, தனது மண்ணில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Related Link
பிரதமர் மோடிக்கு ஷெசெல்ஸ் நாட்டின் மிக உயரிய விருது

பிரதமர் மோடிக்கு ஷெசெல்ஸ் நாட்டின் மிக உயரிய விருது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயங்கரமாக கோபத்தை கக்கி எரிமலையாய் வெடித்த மாணிக்கம் தாகூர்

0
4 mins agoshare
Manickam tagorebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau