news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

நேபாளத்தில் வரலாறு காணாத வெள்ளம்: 157 பேர் பலி

ஏராளமானோரை காணவில்லை

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nepal flood

வெள்ளத்தில் இந்திய ஆன்மிக யாத்ரீகர்கள் 133 பேர் மாயம் 

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது. வடக்கு ரசுவா மாவட்டத்தின் கோஷி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் 133 இந்திய யாத்ரீகர்கள் உட்பட ஏராளமானோரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தால் ரஸ்காவதி என்னும் பகுதியே அடையாளம் தெரியாமல் சிதைந்துள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளத்தில் பல்வேறு முக்கிய கட்டமைப்புகள் அடித்துச் செல்லும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

காட்டுமிராண்டிகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவே முடியாது

ஈரானை ஆளும் காட்டுமிராண்டிகளுடன் உடன்பாட்டை எட்டுவது சந்தேகமே என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவே முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரான் மீது பொருளாதார தடைகள் விதித்த டிரம்ப்பின் நடவடிக்கைக்கு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார். இதுபற்றி முன்னரே டிரம்ப்பிடம் தெரிவித்ததாகவும், தற்போது அவர் இதனை முன்னெடுப்பது சரியானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தடையால் அமெரிக்கா எதையும் சாதிக்கப் போவதில்லை 

புதிதாக விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மூலம் அமெரிக்கா எதையும் சாதிக்கப் போவதில்லை என ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், பேச்சுவார்த்தை மூலமாக பிரச்னைகளை தீர்ப்பதே தங்களின் கொள்கை எனவும், அதேநேரம், இதுவரை தங்கள் பிரச்னைகளில் உறுதியாக இருந்தது போல, இனிவரும் பொருளாதார அழுத்தங்களுக்கு எதிராகவும் உறுதியாக நிற்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், போரின் மூலம் எதையும் சாதிக்க முடியாததை போல, தற்போதைய பொருளாதார தடை நடவடிக்கைகளாலும் அமெரிக்காவால் எதையும் சாதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Related Link
புகழ்பெற்ற லா டொமாட்டினா தக்காளி திருவிழா

புகழ்பெற்ற லா டொமாட்டினா தக்காளி திருவிழா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'டாக்சிக்' திரைப்படம் முதல் நாளிலேயே ரூ.60 கோடி வசூலித்து வரலாற்று சாதனை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved