news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

பெரியம்மாவுடன் கள்ளக்காதல், கையும் களவுமாக பிடித்த கணவன்

துடிக்க துடிக்க நடந்த கொடூரம்

2

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தம்பி மகனுடன் தகாத முறையில் இருந்த மனைவியை பார்த்து ரத்தம் கொதித்த கணவன், உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடியவரை துடிக்க துடிக்க கொ*வதை பார்த்து ரசித்த மனைவியின் கொடூரம். அம்மாவாக பார்க்க வேண்டிய பெண்ணை ஆபாசமாக பார்த்த இளைஞரால் நடுத்தெருவுக்கு வந்த 3 குழந்தைகள்... என்ன நடந்தது?

வீட்டுக்கு வந்த தம்பி மகன்
தெலங்கானா மாநிலம், யாதாதிரி புவனகிரி மாவட்டம், சோட்டுப்பல் அருகே உள்ள அங்கிரெட்டி கூடம் கிராமத்தைச் சேர்ந்த 38 வயதான விவசாயி தானய்யா. இவருடைய மனைவி 35 வயதான சாரதா. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தானய்யாவின் தம்பி மகன், 19 வயதான சிவா. ’சித்தி, சித்தி’ என்று அடிக்கடி தானய்யா வீட்டுக்கு வந்து, சென்று கொண்டிருந்தான் சிவா. சில நாட்களில் பெரியம்மா, சிவா இடையே நெருக்கம் அதிகரித்து கள்ள தொடர்பாக மாறியது.

நேரில் பார்த்த தானய்யா
தானய்யா விவசாய வேலை தொடர்பாக வயலுக்கு செல்லும் நேரத்தில் இரண்டு பேரும் வீட்டில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சிவா, சாரதா ஆகியோருக்கு பெரியம்மா, மகன் உறவு முறை இருந்ததால் அவர்களுக்கு இடையே கள்ளத்தொடர்பு இருக்கும் என்று யாரும் கருதவில்லை. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் வயலில் வேலைக்காக சென்று இருந்த தானய்யா முன்னதாகவே வீடு திரும்பினார். அப்போது வீட்டில் மனைவியும் தம்பி மகனும் ஒன்றாக இருப்பதை பார்த்த தானய்யா கடும் அதிர்ச்சி அடைந்து, இரண்டு பேரையும் கண்டித்து இனிமேல் வீட்டு பக்கம்
வரக்கூடாது என்று சிவாவை எச்சரித்து அனுப்பி வைத்தார். அதன் பின் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் இருந்து வந்ததாக கருதப்பட்டது.

வயல் வெளியில் கொடூரம்
இந்நிலையில் தானய்யா, சாரதா ஆகியோர் தங்களுடைய வயலில் களை எடுப்பதற்காக சென்று இருந்தனர். அப்போது இயற்கை உபாதைக்காக சென்று வருகிறேன் என்று கூறிய சாரதா வயல் அருகில் இருக்கும் புதருக்குள் சென்றார்.  ஆனால், அதன்பின் நீண்ட நேரம் அவர் அங்கிருந்து வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தானய்யா அங்கு சென்று பார்த்தபோது சிவா, சாரதா ஆகியோர் புதருக்குள் இருந்தனர். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த தானய்யா அருகில் இருந்த கட்டையை எடுத்து இரண்டு பேரையும் அடிக்க பாய்ந்தார்.

ஆனால், சிவா அவர் கையில் இருந்த கட்டையை பிடுங்கி தானய்யா தலையில் அடித்தான். இதனால் உயிர் பிழைத்தால் போதும் என்று தானய்யா ஓட்டம் பிடித்தார். ஆனால், சிவா கீழே கிடந்த பெரிய கல் ஒன்றை எடுத்து பெரியப்பா என்றும் பார்க்காமல் தானய்யா மீது வீசி எறிந்தான். பெரிய கல் வந்து தாக்கியதால் கீழே விழுந்த கணவனின் கால்களை சாரதா இறுக்கமாக பற்றிக்கொள்ள அதே பாறாங்கல்லை எடுத்து தானய்யா தலையில் போட்டு கொ* செய்தான் சிவா. அதன் பின் அவன் அங்கிருந்து தப்பி சென்று விட்டான்.

கணவரைக் காணவில்லை
இந்நிலையில், சாரதா பக்கத்து வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் சென்று, எங்களுடைய வயலில் என் கணவர் வேலை செய்து கொண்டிருந்தார். நான் இயற்கை உபாதைக்காக புதருக்குள் சென்று இருந்தேன். திரும்பி வந்து பார்த்தபோது அவரை காணவில்லை என்று நாடகமாடினார். அனைவரும் தேடிப் பார்த்தபோது மண்டை உடைக்கப்பட்ட நிலையில் தானய்யா சடலமாக கிடந்தார்.

காவல்துறை விசாரணை
இதுபற்றி அங்கிருந்தவர்கள் அளித்த தகவல் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார், தானய்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர். விசாரணையின் போது சாரதா நடவடிக்கைகளில் போலீசாருக்கு கடும் சந்தேகம் ஏற்பட்டது. எனவே சாரதாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது அனைத்தையும் ஒப்புக்கொண்ட சாரதா கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அருகில் உள்ள டோல் பிளாசா பகுதியில் பதுங்கி இருந்த சிவாவையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த கள்ளக்காதல் விவகாரத்தில் தானய்யா மரணமடைந்த நிலையில் அவருடைய மனைவியும் தம்பி மகனும் சிறைக்கு சென்று விட்டனர். அவர்களுடைய மூன்று குழந்தைகளும் ஆதரவற்றவர்களாக மாறிவிட்டனர்.

Related Link
பணம் தந்தால் அந்தரங்க வீடியோவா? தர்ஷா குப்தா, திருச்சி சாதனா மீது வழக்கு

பணம் தந்தால் அந்தரங்க வீடியோவா? தர்ஷா குப்தா, திருச்சி சாதனா மீது வழக்கு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வந்தே மாதரம் பாடலின் முதல் 2 பத்திகள் மட்டுமே பாடப்படும்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved