Also Watch
Read this
By: Manigandan Raja

ஒவ்வொரு படத்தையும் மிகவும் கவனமாக கையாள்கிறேன்
ஒவ்வொரு படத்தையும் மிகவும் கவனமாக கையாள்வதாக நடிகை பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தாம் பெரியளவில் படங்களை ஒப்புக் கொள்வது கிடையாது எனவும்ஸ தனித்துவமான கதைகளில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், திரைப்பயணத்தில் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக எடுத்து வைத்து வருவதாகவும், தனது படங்களை குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதுதான் தனது விருப்பம் எனவும், இதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
"இம்மார்ட்டல்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு
ஜி.வி.பிரகாஷ் - கயாடு லோஹர் நடித்துள்ள "இம்மார்ட்டல்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஹாரர் மற்றும் ரொமான்ஸ் கலந்து உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் டிரெய்லரை நடிகர் தனுஷ் வெளியிட்டதோடு, வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
அல்லு அர்ஜுனின் ராக்கா படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி
அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லீ இயக்கும் ராக்கா படத்தில் பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அவர் மிரட்டலான வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதை படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved