Also Watch
Read this
By: Manigandan Raja

ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்
இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ஜி.டி.என் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதவன் நடித்துள்ள இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகவுள்ளது.
கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, யோகி பாபு மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இதயம் முரளி திரைப்படத்தில் நடித்த பிரபல பாடகி ஜோனிதா காந்தி

இதயம் முரளி திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரபல பாடகியும் நடிகையுமான ஜோனிதா காந்தி தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இத்திரைப்படத்தில் ஆசிரியையாக நடித்துள்ள ஜோனிதா காந்தி, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட பல சுவாரசியமான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கிஷன் தாஸ் நடித்துள்ள See you திரைப்படம்

கிஷன் தாஸ் நடித்துள்ள சீ யூ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீவஸ்டன் இயக்கியுள்ள இப்படத்தில் கிஷன் தாஸ் கதாநாயகனாகவும், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். எம் எஸ் பாஸ்கர், அருண் குமார், அக்ஷயா, கார்த்திக் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.