Also Watch
Read this
தமிழ் சினிமாவில், குறைந்த படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை உமா சங்கரி. பிரபல நடிகை சுமித்ராவின் மகளான இவர், 2000ஆம் ஆண்டு சீமான் இயக்கிய "வீரநடை" படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

வெற்றிப்படங்களில்...
தொடர்ந்து, சொக்கத்தங்கம், கோவை பிரதர்ஸ், கலகலப்பு, தென்றல், அடைக்கலம், மணிகண்டா, ரசிகர் மன்றம், வானவில், பாக்கியலட்சுமி என்று பல படங்களில் நடித்தார்.

2006ல் திருமணமான பிறகு, சினிமாவில் இருந்து விலகிய உமா சங்கரி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்குமார் நடித்த "வலிமை" படத்தில்,

அவருக்கு தாயாக, ஒரு சிறிய கதாபாத்திரத்தில், மீண்டும் ரசிகர்கள் முன் வந்தார்.

இந்த நிலையில், சோஷியல் மீடியாவில் அதிக ஆக்டிவாக இல்லாத உமா சங்கரி, இப்போது தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை பகிர்ந்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

உருக்கமான பதிவு
இதுகுறித்து, தனது பதிவில் உமா என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா? தனக்கு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாவும், தற்போது கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி சிகிச்சையின் இரண்டாவது சைக்கிளை எடுத்து வருவதாகவும், கூறி உள்ளார்.

"ஒவ்வொரு நாளையும் தைரியமாக எதிர்கொண்டு வருகிறேன். இந்த கடினமான காலத்தை எப்படி சமாளிக்க வேண்டும் என கற்றுக் கொண்டு இருக்கிறேன். என்னோட குடும்பத்தினரும், எனக்கு அன்பும் ஆதரவும் தரும் அனைவருக்கும் என் மனசார நன்றி தெரிவிக்கிறேன். தொடர்ந்து குணமடைந்து முன்னேறி வருகிறேன்," என்று உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.

சவால், மன உறுதி...
இந்த பதிவு வெளியான பிறகு, ரசிகர்கள் பலரும் உமா சங்கரி விரைவில் குணமடைந்து திரும்பவும் சினிமாவுக்கு வர வேண்டும் என்று, வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், இவ்வளவு பெரிய சவாலையும் தைரியமாக எதிர்கொள்ளும் அவரது மன உறுதி பலருக்கும் உத்வேகமாக இருக்கும் என்று, ஃபேன்ஸ் மற்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved