Also Watch
Read this
By: Manigandan Raja

ஹாரர் கதைக்களத்தில் உருவான படத்துக்கு வரவேற்பு
ஜி.வி.பிரகாஷ்குமார், கயாடு லோகர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'IMMORTAL' திரைப்படம் 6 நாட்களில் 10 கோடி ரூபாய் வசூலானதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள 'IMMORTAL', ஜி.வி.பிரகாஷ்-க்கு திருப்புமுனை படமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
'மண்டாடி' படம் குறித்து சிவாகார்த்திகேயன் பதிவு
'மண்டாடி' திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக குறிப்பிட்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சூரியின் கடின உழைப்பு, விடா முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் எப்போது வெற்றி பெறும் என்றும் சூரிக்கும், படக்குழுவுக்கும் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved