Also Watch
Read this
By: Manigandan Raja

நடிகை சுவாசிக்காவை பாராட்டித் தள்ளிய விஜய் ஆண்டனி :
நடிகை சுவாசிகா தனது சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதுக்கு மேல் தகுதியானவர் என்றும், இந்தியாவில் ஆஸ்கர் விருதுகள் கொடுக்கப்பட்டால் அது அவருக்குத் தான் கொடுக்கப்பட வேண்டும் என்றும் நடிகர் விஜய் ஆண்டனி பாராட்டியுள்ளார்.
சென்னையில் நடிகர் விஜய் ஆண்டனியின் நூறு சாமி திரைப்படத்தின் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய விஜய் ஆண்டனி, இந்த படத்தில் சுவாசிகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக தெரிவித்தார்.
சூர்யா-47 திரைப்படத்தில் 'லாலேட்டன்' மோகன்லால் இல்லை :

சூர்யா-ஜீத்து மாதவன் கூட்டணியில் உருவாகி வரும் சூர்யா-47 திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், படக்குழு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
திரைப்படத்தின் FIRST LOOK POSTER கூட இன்னும் வெளியாகவில்லை என்றும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் இயக்குநர் ஜீத்து மாதவன் கூறினார். விஸ்வநாதன் & சன்ஸ் ((Vishwanath & Sons)) படத்திற்குப் பின் சூர்யா 47 படத்திற்கான பணிகள் தொடங்கும் என தெரிகிறது.
உண்மை கதையை தழுவி உருவாகும் 'OM CHAPTER-1' :

ராஜ்குமார் பெரியசாமி - தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் 'OM' திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியான ஒரே நாளில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் 'OM CHAPTER-1' படம் அக்டோபர் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சாய் அபியங்கர் இசைக் கோர்ப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved